English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు

துபாயில் உடல் உறுப்பு குறைபாடு உடையோருக்காக புது அமைப்பு

துபாய்: உடல் உறுப்பு குறைபாடுடையோரது நலனிற்காக துபாயில் புதிய அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

துபாய் இந்திய துணைத் தூதரகத்தின் புதிய முயற்சியாக சமூகத்தில் உடல் உறுப்பு குறைபாடு உடையோருக்காக, Society for Advocacy & Awareness Towards Holistic Inclusion (SAATHI) எனும் புதிய அமைப்பு வெள்ளிக்கிழமை இந்திய துணைத்தூதரக வளாகத்தில் துவங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், துபாய் அரசின் சமூக நலத்துறை இயக்குநர் டாக்டர் மர்யம் முஹம்மது மதார், இந்திய துணைத் தூதர் வேணு ராஜாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய பெண்கள் அமைப்பின் தலைவியும், சாதி அமைப்பின் இயக்குநருமான டாக்டர் சரோஜ் தாப்பா அமைப்பின் செயல்திட்டங்களை விவரித்தார். இந்நிகழ்வில் பல்வேறு துறை நிபுணர்கள் பங்கேற்றனர்.

இவ்வமைப்பு குறித்து மேலதிக தகவல் அறிய விரும்புவோர் www.saathidubai.org எனும் இணையத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஜூன் 16, 2009 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
 
2nd Test , Headingley, Leeds
England: 279 / 5, 81.3 Overs
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
Oneindia  Oneindia Login
2nd Test , Headingley, Leeds
England: 279 / 5, 81.3 Overs