2009-ல் உலகின் சிறந்த சிஇஓ இந்திரா நூயி!

செவ்வாய்க்கிழமை, ஜூலை 14, 2009, 14:39 [IST]
வாஷிங்டன்: இந்த ஆண்டின் 2009-ல் உலகின் மிகச் சிறந்த தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) சென்னையைச் சேர்ந்தவரும் பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலருமான இந்திரா நூயி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  Read:  In English 
அமெரிக்காவின் "க்ளோபல் சப்ளை செய்ன் லீடர்ஸ் குரூப்" நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்குக் கிடைக்கும் உயர்ந்தபட்ச அங்கீகாரம் இந்த விருது என்பது குறிப்பிடத்தக்கது.

மாறிவரும் சுற்றுச் சூழல் மற்றும் கால நிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு பெப்ஸிகோ நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை மாற்றிய பெருமைக்குரியவர் நூயி என்றும், பெப்ஸிகோவின் வர்த்தக நடவடிக்கைகளை குளிர்பான தயாரிப்புகளையும் தாண்டி விரிவடைய வைத்தவர் என்றும் இந்த விருது அறிவிப்புக்கு விளக்கமும் தந்ததுள்ளது "க்ளோபல் சப்ளை செய்ன் லீடர்ஸ் குரூப்".

"இந்த விருது தனக்கு கிடைத்திருப்பது பெப்ஸி நிறுவனத்துக்கு கிடைத்ததற்குச் சமம். என்னுடன் பணியாற்றும் 198000 பணியாளர்களுக்கும் கிடைத்துள்ள கவுரமே இது", என்று இந்திரா நூயி கருத்து தெரிவித்துள்ளார்.

IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST