சென்னை: திமுக சார்பில் வழங்கப்படும் அண்ணா விருது இந்த ஆண்டு முதல்வர் கருணாநிதிக்கு வழங்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் அண்ணா விருது உள்ளிட்டவை வழங்கப்படும்.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளரும் நிதியமைச்சருமான க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நிறைவு விழாவினை முன்னிட்டு, செப்டம்பர் 26ம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது.
இதில் திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதிக்கு அண்ணா விருது, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு பெரியார் விருது, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு கலைஞர் விருது, முனைவர் வா.செ.குழந்தைசாமிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.