English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు

2030-ல் செவ்வாய் கிரகத்துக்கு இந்திய விண்கலம்! - டாக்டர் அப்துல் கலாம்

18 Mars Mission Kalam
டேராடூன் : 2030-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு இந்திய விண்கலம் செல்வதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

டேராடூனில் ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டு மாணவர்களிடையே அப்துல் கலாம் பேசியதாவது:

2030-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்துடன் இது சாத்தியமாகக் கூடியதே.

ஊழலை ஒழிக்க அவரவர் வீட்டில் இருந்தே பிரசாரத்தை ஆரம்பிக்க வேண்டும். இது தான் சிறந்த வழி ஆகும்.

கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாடு இது. உங்கள் தந்தை துரதிர்ஷ்டவசமாக ஊழல் புரிபவராக இருந்து நீங்கள் அவரிடம் ஊழல் செய்வதை விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டால் அதுதான் வீட்டில் இருந்தே ஊழலை ஒழிப்பதற்கு மிகச் சிறந்த வழியாகும். இது போன்று அனைவரும் செய்ய ஆரம்பித்துவிட்டால் ஊழல் என்பது இல்லாமல் போகும்..." என்றார் கலாம்.

கடந்த 2001-ம் ஆண்டு நிலவுக்கு சந்திராயன்-I அனுப்புவது குறித்து கலாம் இதே போன்றதொரு மாணவர் கூட்டத்தில்தான் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் மத்திய அரசின் அறிவியல் ஆலோசகராக இருந்தார்.

Published by:
அக்டோபர் 18, 2010 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
 
    Upcoming Matches
ENG Vs NZ - 2nd Test at Headingley Fri 24th May Test
Indian Premier League 2013 - 3rd Preliminary Final at Eden Gardens Fri 24th May IPL
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL
User Comments
APJ அப்துல்கலாம் ரசிகன் 19 Oct 2010 05:10 pm
உங்கள் தந்தை துரதிர்ஷ்டவசமாக ஊழல் புரிபவராக இருந்து நீங்கள் அவரிடம் ஊழல் செய்வதை விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டால் அதுதான் வீட்டில் இருந்தே ஊழலை ஒழிப்பதற்கு மிகச் சிறந்த வழியாகும். - இது இரு நல்ல ஆரம்பம்...
Reply
கிருஷ்ணமூர்த்தி 19 Oct 2010 11:38 am
ஐயா உங்களின் ஆசி இந்தியாவுக்கு இன்னும் தேவை .எல்லாம் வல்ல இறைவன் என்றும் உங்களை இளமையுடன் பாதுகாக்க வேண்டும் .இளைய தலைமுறை உங்களின் கனவை நனவாக்குவார்கள் என்று நம்பி இருக்கும் இந்திய மக்களில் நானும் ஒருவன் .
Reply
jeeva 18 Jul 2012 08:24 pm
நீங்கள் ஜனாதிபதியாக இருந்த போது உழைல் யதவது தடுக்க முடியஇல்லை
Reply
சதீஷ்madurai 19 Oct 2010 10:36 am
நீங்க தான் உண்மையான இந்தியன் .........நீங்க மீண்டும் குடியரசு தலைவராக வர வேண்டும் .
Reply
கத்திய ஹாஜா மைதீன் 19 Oct 2010 06:02 am
மனிதனின் அறியபன்புகள் .தன்னை உணர்ந்தவர்கள் மட்டும் தான் வெலிபடுத்தமுடியும். இறைவனை அடைய நினைப்பவர்கள் நல்லா மனிதனாக இருக்கமுடியும் .
Reply
manavan 19 Oct 2010 03:33 am
நீங்க எப்பவும சிறந்த மனிதர்
Reply
ARAVINDHAN 19 Oct 2010 12:21 am
ஐயா நீங்க மீண்டும் குடியரசு தலைவராக வந்து இந்திய மக்களை வாழ வையுங்கள் .
Reply
மாணவன் 19 Oct 2010 12:05 am
எங்களின் அறிவியல் ஆக்கத் தந்தை மேதகு அய்யா கலாம் அவர்கள்............. மாணவன்
Reply
மக்கள் 18 Oct 2010 10:03 pm
அய்யா ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க வாழ்க!
Reply
senthil 18 Oct 2010 03:38 pm
you are such a great man ABJ sir
Reply
nan 18 Oct 2010 03:10 pm
பசங்களா எல்லோரும் நல்லா படிங்க .நாம நாட்டை முன்னேற்றுவோம் ,என்ன னா அரசியல்வாதி பசங்களுக்கு பொழுதுபோக்குக்கு காசு இல்லையாமஎ
Reply
[ கருத்தை எழுதுங்கள் ]
Oneindia  Oneindia Login
    Upcoming Matches
ENG Vs NZ - 2nd Test at Headingley Fri 24th May Test
Indian Premier League 2013 - 3rd Preliminary Final at Eden Gardens Fri 24th May IPL
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL