English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు

காமன்வெல்த் போட்டி துவக்க விழாவில் 'ஜெய் ஹோ' பாடுகிறார் ரஹ்மான்!

Ar Rahman Sing Jai Ho Commonwealth
டெல்லி: காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ஜெய் ஹோ பாடலையும், மா துஜே சலாம் பாடலையும் பாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டிக்கான மைய நோக்குப் பாடலை ஏ ஆர் ரஹ்மான்தான் உருவாக்கினார். இதற்காக அவருக்கு ரூ 5.5 கோடி சம்பளமாகத் தரப்பட்டது.

ஆனால் இந்தப் பாடல் திருப்தியாக இல்லை என்று பரவலாக அதிருப்தி கிளம்பியது. இதைத் தொடர்ந்து பாடலை ட்ரிம் செய்தார் ரஹ்மான்.

இந்நிலையில், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ஜெய் ஹோ பாடலையும், வந்தே மாதரம் ஆல்பத்தில் இடம் பெற்ற மா துஜே சலாம் பாடலையும் பாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசப்பிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மகாத்மாவுக்குப் பிரியமான 'வைஷ்ணவ ஜன தோ...' பாடலையும் அவர் பாட உள்ளார்.

தொடக்க விழாவில் மா துஜே சலாம் பாடல்தான் கடைசிப் பாடலாக இருக்கும் என்றும் காமன்வெல்த் போட்டி வட்டாரங்கள் தெரிவித்தன. தொடக்க மற்றும் நிறைவு விழாக்களுக்காக ரூ 300 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 10,000 கலைஞர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

Published by:
செப்டம்பர் 24, 2010 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
 
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors: 93 / 3, 12.4 Overs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
New Zealand: 20 / 3, 6.1 Overs
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Match starts at 08:00 pm IST  
User Comments
இடியட் 27 Sep 2010 09:46 pm
ரஹ்மான் சார், சிவமணியை மெதுவாக அடிக்க சொல்லுங்க.! கல்மாடி கட்டிய அரங்கம் விழுந்துடப் போகுது.!
Reply
rahman 24 Sep 2010 12:56 pm
இப்போ ஜெய் ஹோ இதுவும் நல்லா இல்லைன்னு சொன்னா ட்ரிம் செய்து ஐய ஹோ என்றும் பாடுவேன். ஐந்து கோடி எனக்கு. எல்லா புகழும் இறைவனுக்கு. ஒரே ஊளை சத்தம். ஒண்ணுமே வெளங்கலே. ஐய ஹோ .... ஐய ஹோ
Reply
சூப்பர் 25 Sep 2010 02:16 am
சூப்பர் பதில். பல இசை மேதாவிகள் இல்ல இந்த நாட்டில் இந்த கி போர்ட் கோவிந்தனை எண்டான் கட்டிக்கிட்டு மரடிக்கிரர்களோ தெரியல. பொய் ஹோ பொய் ஹோ
Reply
சூப்பர் 25 Sep 2010 04:17 am
சூப்பர் பதில். பல இசை மேதாவிகள் உள்ள இந்த நாட்டில் இந்த கி போர்ட் கோவிந்தனை ஏன்தான் கட்டிக்கிட்டு மாரடிக்கிரார்களோ தெரியல. பொய் ஹோ பொய் ஹோ
Reply
[ கருத்தை எழுதுங்கள் ]
Oneindia  Oneindia Login
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors: 93 / 3, 12.4 Overs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
New Zealand: 20 / 3, 6.1 Overs
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Match starts at 08:00 pm IST