English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు

தென் மாவட்ட ரயில்களில் இடமில்லை- ஸ்பெஷல் ரயில்கள் விட்டால்தான் உண்டு

Reservation Ends Southern District
நெல்லை: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து வழக்கமான ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது. இனி ஸ்பெஷல் ரயில்கள் விட்டால்தான் உண்டு என்பதால் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்ல உள்ள மக்கள் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

கோடை விடுமுறையை கழிக்க என்ன பிளான் போட்டாலும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் மக்களுக்கு ரயிலில் இடம் கிடைப்பது என்பது குதிரைகொம்புதான்.

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் முடிந்துவிட்டன. எஸ்எஸ்எல்சி தேர்வு வரும் 7ம் தேதியும், மெட்ரிக் வரும் 9ம் தேதியும் முடிவடைகிறது. இதையடுத்து சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் கோடை விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க ரயில்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

கடைக் கோடி மாவட்டமான நெல்லை, குமரி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களும் சென்னைக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனால் பெரும்பாலான ரயில்களில் இப்போதே இடம் நிரம்பி விட்டது. நேற்று மாலை நிலவரப்படி பெரும்பாலான ரயில்களில் 2ம் வகுப்பு படுக்கை வசதி, ஜூன் முதல் வாரம் வரை இல்லை. காத்திருப்போர் பட்டியல் நீள்கிறது. ஒரு சில நாட்களில் மட்டுமே இடம் உள்ளது.

சென்னையில் இருந்து குமரி செல்லும் 2633 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் மே 25 வரை இடமில்லை. மே 25ல் ஆர்ஏசி உள்ளது. 2634 கன்னியாகுமரி-சென்னை ரயிலில் ஜூன் 3ம் தேதி வரை இடமில்லை. ஜூன் 2ல் ஆர்ஏசி உள்ளது. 4ம் தேதிக்கு பிறகு இருக்கை வசதி உள்ளது. 6123 சென்னை-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மே 25ம் தேதி வரையும், 6124 சென்னை-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜூன் 2ம் தேதிவரையும் இடமில்லை. 6127 சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மே மாதத்தில் 19,25 தேதிகளில் மட்டும் இடம் உள்ளது. 6128 குருவாயூர் சென்னை ரயிலில் மே 19 தேதியில் ஆர்ஏசி நிலை. அதன்பின் காத்திருப்போர் பட்டியல்.

வழக்கமாக கோடையில் சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கும். இந்த கோடைக்கான சிறப்பு ரயில்கள் பற்றி இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 5, 2010 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
 
Group A , The Kia Oval, Kennington
Sri Lanka won by 20 runs
User Comments
esspee 06 Apr 2010 07:52 pm
முன் பதிவு செய்து போகிறவர்கள் போகட்டும் . ரிசர்வ் செய்யாமல் போரவங்களுக்கவது கோச் சேர்கட்டுமே இந்த ரயில் நிர்வாகம் .
Reply
சந்தானம் 06 Apr 2010 07:37 pm
நம் நாட்டில் மட்டும் தான் இவ்வளவு கேவலமான ரயில் பயணம் உள்ளது எப்போது பார்த்தாலும் வௌவால் மாதிரி பயணம் செய்வதே வேலை
Reply
velu 05 Apr 2010 05:18 pm
எல்லாம் சென்னைக்கே கொடுத்து தென் மாவட்டங்களை தள்ளிவிட்டது இந்த அரசு.
Reply
சீனை 05 Apr 2010 05:46 pm
தென் மாவட்டத்தில் நிறைய அரிவாள் பாக்டரி இருக்கு
Reply
இது வழக்கம் தான் 05 Apr 2010 03:41 pm
இது ஆண்டுதோறும் நடக்கும் விஷயம் தான். சென்னையின் மக்கள்தொகை பெருகுவதே இதற்க்கு காரணம். இங்கே இருக்கும் பெரிய பெரிய தொழிநுட்ப நிறுவனங்களை தெற்கில் உள்ள நகரங்களுக்கு மாற்றினால் நல்ல பலன் கிடைக்கும். இங்கு தரும் சம்பளத்தில் கொஞ்சம் குறைத்து கொடுத்தாலும் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வருவதை பல தென் மாவட்ட நபர்கள் விரும்புவார்கள்.
Reply
Thamizhan 06 Apr 2010 09:56 am
நீங்கள் சொல்லுவது சரி தான் அண்ணா.
Reply
தட்ஸ்தமிழ் 05 Apr 2010 03:29 pm
ஆசிரியரே என்ன சொல்ல வரீங்க ?????
Reply
[ கருத்தை எழுதுங்கள் ]
Oneindia  Oneindia Login