English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు

வாஷிங்டனில் நிறுவப்படும் திருவள்ளுவர் சிலை மதுரையில் தயார்

மதுரை: வாஷிங்டனில் நிறுவுவதற்காக ரூ.3 லட்சம் மதிப்பில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலை மதுரையில் தயாராகி உள்ளது.

அமெரிக்காவில் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் என்ற அமைப்பை பேராசிரியர் செல்வின்குமார் என்பவர் நடத்திவருகிறார். இந்த அமைப்பு சார்பில் அங்கு திருவள்ளுவர் சிலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த சிலை மதுரை பூம்புகார் நிறுவனம் மூலம், சுவாமி மலை பூம்புகார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாலரை அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன இச்சிலை, கன்னியாகுமரி கடல் நடுவே தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் 3 மாதமாக இச்சிலை உருவாக்கப்பட்டதாக பூம்புகார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, தமிழ்ப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் செல்வின்குமார் கூறுகையில், 'அமெரிக்காவின் வாஷிங்டனில் காந்தியடிகளின் சிலை ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளது. அதன்பிறகு, திருவள்ளுவர் சிலை இப்போது அமைக்கப்படுகிறது.

இதன்மூலம், உலகத் தமிழர்களிடையே தமிழின் தொன்மை, பாரம்பரியத்தை எடுத்துரைக்கலாம்' என்றார்.

மார்ச் 8, 2010 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
 
Semi-Final , The Kia Oval, Kennington
England won by 7 wickets
User Comments
தமிழ்ச் செல்வன் 09 Mar 2010 07:13 am
2005 ஆம் ஆண்டு வாஷிங்டன் அருகில், தமிழ்ச் சங்கமும், வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையும் சேர்ந்து பல பெரும் திருக்குறள் உரையாசிரியர்கள் பங்கு பெற்ற "பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு" ஒன்று நடத்தி, இமாலயத்தில் இருந்து கல்லெடுத்து அருமையாக செய்து திருவள்ளுவர் சிலையொன்றையும் வைத்துள்ளார்கள். வாஷிங்டன் பகுதியில் உள்ள எந்தத் தமிழருக்கும், இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள "உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம்" என்பது எவருக்கும் தெரியாது. நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. பணமிருந்தால் எதையும் வாங்கலாம்!!
Reply
naanjilpeter 08 Mar 2010 05:43 pm
திருவள்ளுவர் சிலை ஏற்கனவே வாஷிங்டனில் முருகன் கோவிலில் வைக்கப்பட்டுயுள்ளது . .
Reply
பட்டிகாட்டான் 08 Mar 2010 03:54 pm
பிறர் மனை நோக்காமை, கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமை. இதுகளுக்கு நேர் எதிரி அமெரிக்கா. என்னாட இது வள்ளுவருக்கு வந்த சோதனை. நல்ல வேலை செத்துட்டார். இருந்தா எங்க கத்சிக்கு வாங்கன்னு சொல்லியே கொன்னு இருப்பானுங்க
Reply
அருமை 09 Mar 2010 12:10 am
அருமையை சொன்னேர் தோழரே!
Reply
டாஸ் மாக்கான் 08 Mar 2010 03:38 pm
"கள்ளுண்ணாமை" என்ற அதிகாரத்தியே ஏற்படுத்தி மதுவை எதிர்த்தவர் திருவள்ளுவர். அவருக்கு மாபெரும் சிலை ஏற்படுத்தி ஆனால் " டாஸ்மாக்" மூலம் அனைவரையும் நடைபிணமாக்கி வரும் "கலைனருக்கே" புகழ்கள். தமிழனை " முடமாக்கி " இலட்சக்கணக்கான குடும்பங்களை நடுதெருவுக்கு கொண்டு வந்த பாச தலைவனுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தலாம் இந்த குடிகாரர்கள்.
Reply
வீர வன்னியன் 08 Mar 2010 12:47 pm
தமிழ் வளர்த்து உயிர் வாழ்ந்த கூட்டம் நம் முன்னோர் கூட்டம் !!
Reply
[ கருத்தை எழுதுங்கள் ]
Oneindia  Oneindia Login