துபாயில் நடந்த நகரத்தார் சங்கத்தின் 135-வது கூட்டம்

திங்கள்கிழமை, அக்டோபர் 3, 2011, 12:14 [IST]
INK Meet at Dubai
துபாய்: துபாயில் நகரத்தார் சங்க கூட்டமைப்பின் 135-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி அல் கிஸஸ் டியூன்ஸ் ஹோட்டல் அபார்ட்மெண்டில் கடந்த 23-ம் தேதி நடந்தது.

இந்த நிகழ்ச்சி காலை 10.30 மணியளவில் இனிதே தொடங்கியது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக அனைத்து நிகழ்ச்சிகளையும் பெண்களே நடத்தினார்கள். இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் திருமதி. தெய்வானை முத்துராமன் மற்றும் திருமதி. கதிரேசன் ஆகியோர் மிகச் சிறப்பாக நடத்தினர்.

செல்வி. நந்தினி சரவணனின் கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. இதையடுத்து செல்வி. பிரவீணா சண்முகம் திருக்குறள் ஒப்புவிக்க, செல்வி. மீனாட்சி முத்துராமன் அருமையாக நடனம் ஆடினார்.

அதனைத் தொடர்ந்து சங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி தலைவர் வீர. அழகப்பன் உரையாற்றினார். குழந்தைகளின் ஆங்கிலப் புலமையை அறிய இராம. நாகப்பன் "கட்டுரைப் போட்டியை" நடத்தினார். சினிமா வினாடி-வினா நிகழ்ச்சியை செல்வி. மெய்யம்மை வள்ளியப்பன் மற்றும் செல்வி. கண்ணாத்தாள் முத்துராமன் ஆகியோர் இணைந்து நடத்தினார்கள். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆவலுடன் கலந்து கொண்டனர்.

எழுத்துப் பட்டறை குழுவினர் குழந்தைகள், பெண்கள் கலந்து கொண்ட இசை நாடகத்தினை நடத்தினார்கள். குழந்தைகளுக்காக நடையழகு போட்டி நடைபெற்றது. புதிய உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.

வழக்கம் போல் திருமணம் மற்றும் கல்விக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டன. சங்கத்திற்காக இணையதளம் புதுப்பிக்கப்பட்டு அனைவரின் பார்வைக்கு அளிக்கப்பட்டது.(www.nagarathars.com).

அதன் பின்பு நீதிக்கதை நாடகத்தை சுபஸ்ரீ, அனுஸ்ரீ மணிகண்டன் மற்றும் காவேரி அருணாசலம் ஆகியோர் சிறப்பாக நடத்தினர். மதிய உணவிற்கு பிறகு நீங்களா! நாங்களா! நிகழ்ச்சியில் "நகரத்தார்கள் வெளிநாட்டு வாழ்க்கை பெற்றது அதிகமா?இழந்தது அதிகமா?" என்று வாதிக்கப்பட்டது.

அதிர்ஷ்ட குலுக்கல் நடைபெற்று, வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் மற்றும் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாலை 5.30 மணியளவில் சங்கத்தின் செயலாளர் மு.சுவாமிநாதன் நன்றியுரை வழங்க சங்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
English summary
INK's 135th general body meeting was held on september 23 at 10. 30 am in Dunes apartments. Various competitons and cultural programmes were held. New members were introduced and the new look of the nagarathars website was shown to the members.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST