For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடைகளில் உள்ள வியர்வைக் கறையை அகற்றுவது எப்படி?

By Siva
Google Oneindia Tamil News

Sweat Stain
உங்கள் ஆடைகளில் வியர்வைக் கறை உள்ளதா? அதனால் அடுத்தவர்களுடன் பேச உங்களுக்கு சற்று கூச்சமாக உள்ளதா? கவலையை விடுங்கள், வியர்வைக் கறைகளை எப்படி அகற்றுவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வியர்வைக் கறையைப் போக்குகிறேன் என்ற பெயரில் குறிப்பிட்ட இடத்தில் துணியைப் போட்டு தேய், தேய் என்று தேய்த்தால் அது நூல், நூலாகக் கிளம்பிவிடும். அவ்வாறு கஷ்டப்படாமல் கறையைப் போக்க சில வழிகள்,

1. வியர்வைக் கறை படிந்த துணிகளை எழுமிச்சம் சாறு கலந்த தண்ணீர் அல்லது சோடா தண்ணீரில்10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கறையும் போகும், துணியும் நல்ல வாசனையாக இருக்கும்.

2. வியர்வைக் கறை படிந்த இடத்தை பிரஷ்ஷை வைத்து தேய்க்காமல் கையில் கசக்குவதே மேல். வியர்வையில் உள்ள உப்பு மற்றும் கெமிக்கல் துணியை லேசாக்கியிருக்கும், அப்போது பிரஷ் போட்டால் துணி கிழிந்துவிடும்.

3. வியர்வைக் கறைபடிந்த துணியை துவைத்து வெயிலில் உலர வைக்கவும். அப்போது தான் அதில் உள்ள பங்கஸ் சாகும்.

4. துணிகளை துவைத்த பிறகு சில நிமிடங்கள் துணிகளுக்கான கன்டிஷனர்களில் ஊற வைப்பது நல்லது.

5. சாயம் போகும் துணிகளை உப்புத் தண்ணீரில் ஊற வைத்து துவைத்தால் துணி புதிது போன்று இருக்கும்.

English summary
Removing sweat stains on clothes is not easy as over washing and brushing may spoil the crispness and colour of the clothes. The fabric in the area looses thickness and gets bobbins. A few cleaning tips will give bigger ideas for housekeeping.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X