For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பண்பொழி திருமலைக்கோவில் மலைப்பாதை பிப் 27ல் திறப்பு-பக்தர்கள் மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

Panpozhi Thirumalai Kumaraswamy Temple
செங்கோட்டை: பண்பொழி திருமலை கோவிலில் ரூ.3 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மலைப்பாதை திறப்பு விழா வரும் 27-ம் தேதி நடக்கிறது.

செங்கோட்டை அருகே அமைந்துள்ள பண்பொழி திருமலை குமாரசாமி கோவில் தென்மாவட்டங்களில் பிரசித்த பெற்ற மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு பக்தர்கள் சுமார் 650 படிகள் ஏறிச் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் வயதான பக்தர்கள் சிரமப்பட்டனர். மலைப்பாதை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம் மற்றும் அறங்காவலர்கள் முயற்சியால் தமிழக அரசு ரூ.5 கோடி மதிப்பீட்டில் மலைப்பாதை அமைக்க அனுமதியளித்தது.

கடந்த 2009-ம் ஆண்டு இதற்கான பணியை அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் துவங்கி வைத்தார். இரண்டரை கி.மீ. தூரமுள்ள இப்பாதையில் 5 பெரிய பாலங்கள் உள்பட 13 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து மலைப்பாதை திறப்பு விழா வரும் 27-ம் தேதி நடக்கிறது. இந்த திறப்பு விழாவில் சபாநாயகர் ஆவுடையப்பன், அறநிலையதுறை அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

English summary
Panpozhi temple's hill path will be opened on february 27. Devotees are glad to hear this news. TN assembly speaker Avudaiappan, hindu religious and charitable endowments minister Periyakaruppan and others will attend the opening ceremony.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X