English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు

பர்கண்டி... உலக உணவுகள் ஒரே இடத்தில்!

Burgundy S New Way Celebrate Your Passion For Food Aid0136
உலகின் ருசிமிக்க பலவித உணவுகளை சுவைத்துப் பார்க்க சென்னையில் ஒரு இடம் உள்ளது. அதுவும் நகரப் பரபரப்பு எதுவுமே தெரியாத அமைதியான ஏரியாவில்.

அந்த உணவகத்துக்குப் பெயர் பர்கன்டி. அமைந்துள்ள இடம் எம்ஆர்சி நகரின் சாமர்செட் வளாகம். செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அருகில்.

உணவகத்துக்குள் உள்ளே நுழைந்தாலே இனிய நறுமணமும், கண்களை உறுத்தாத வெளிச்சமும் நல்ல சூழலை உணரவைக்கின்றன.

தோசை, பீஸா, பாஸ்தா, அசைவ உணவுகள் என அத்தனையும் இங்கு உண்டு. காரசாரமான மதுரைக் கோழி குழம்பும் கிடைக்கும், அசத்தலான இத்தாலிய, ஸ்பானிஸ் வகை உணவுகளும் கிடைக்கும். அதுதான் பர்கன்டியின் விசேஷம்.

வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் வெளியில் அறையெடுத்துத் தங்கி, சாப்பாட்டுக்கு இங்கு வரவேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால், இந்த உணவக மாடியில் சகல வசதிகளுடன் கூடிய நட்சத்திர அறைகளை ஏற்பாடு செய்து தருகிறார்கள். அமைதியான சூழலில் தங்கி விரும்பிய உணவை உண்ணலாம்.

இந்த உணவகத்தை நடத்தும் விபின் ஏற்கெனவே சப்வே, டஸ்கானா போன்ற உணவகங்களை நகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறார்.

இந்த உணவகத்துக்கு திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள். எனவே முன்கூட்டியே ரிசர்வ் செய்வது சிறந்தது. ரிசர்வேஷனுக்கு 49001000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Published by:
English summary
Burgandy’s – Joy Personified is a multi-specialty all day lounge located across MRC Nagar near Chettinad Vidyasharam School. Brimmed with varieties of dishes ranging from Pancakes and Dosas to the Pizzas and Pastas the menu books leaves you not to just limit with few dishes.
நவம்பர் 12, 2011 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
 
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Sunrisers: 83 / 4, 15.5 Overs
User Comments
tamil 04 Jul 2012 06:33 pm
உணவோட ரேட் என்னனு தெரியலையே!
[ கருத்தை எழுதுங்கள் ]
Oneindia  Oneindia Login
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Sunrisers: 83 / 4, 15.5 Overs