For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பக்ரீத் பண்டிகை: குர்பானிக்கு நெல்லை,தூத்துக்குடி, குமரிக்கு ஒட்டகங்கள் வந்தன

Google Oneindia Tamil News

Qurbani Camel
நெல்லை: பக்ரீத் பண்டிகையன்று குர்பானி வழங்குவதற்காக ஆந்திராவில் இருந்து நெல்லை, தூத்துக்குடி,குமரி மாவட்ட பகுதிகளுக்கு 9 ஒட்டகங்கள் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டன

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்றாகும். தியாகத் திருநாளான பக்ரிக் பண்டிகையன்று அவர்கள் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம்.அதன் பின் அவரவர் வசதிக்கு ஏற்ப ஆடு, மாடு, ஓட்டகம் போன்றவற்றை பலியிட்டு, அந்த இறைச்சியை 3 பங்குகளாக பிரித்து ஒன்றை வீட்டிற்கும், 2வது பங்கை குடும்பத்தார், உறவினர்களுக்கும், 3வது பங்கை ஏழைகளுக்கும் வழங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை வரும் 7ம்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இஸ்லாமியர்கள் குர்பானி வழங்க ஆந்திரா மாநிலம், கடப்பா ஓட்டக சந்தையில் 9 ஒட்டகங்களை வாங்கியுள்ளனர். சுமார் 150 முதல் 200கிலோ வரை எடை கொண்ட இந்த ஒட்டகங்கள் ஒவ்வொன்றும் தலா 40 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாயாகும். அந்த 9 ஒட்டங்களும் வாகனம் மூலம் தென் மாவட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஒட்டகங்கள் நெல்லைமாவட்டம், மேலப்பாளையம் -3 ஏர்வாடி - 2, களக்காடு -1, செங்கோட்டை -1, குமரிமாவட்டம் திங்கள்சந்தை - 1, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்ணம்-1என தனித்தனியா பிரித்து அந்தந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

English summary
9 camels have been brought to Nellai, Kanniyakumari and Tuticorin for give qurbani on the eve of Bakrid. The camels have arrived from Andhra Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X