செயற்கை மார்பகத்திற்குள் 2.5 கிலோ கொகைனை புதைத்து எடுத்து வந்த மாடல் அழகி

திங்கள்கிழமை, டிசம்பர் 26, 2011, 10:48 [IST]
Spanish Model Caught Smuggling Cocaine In Fake Breasts
ரோம்: பிரேசிலிலிருந்து ரோம் நகருக்கு வந்த விமானத்தில் பயணித்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 33 வயது மாடல் அழகி, தனது மார்பகத்திற்குள் 2.5 கிலோ கொகைன் போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அந்த போதைப் பொருளைப் பறிமுதல் செய்து அழகியையும் கைது செய்தனர்.

அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. எம்எப்எம் என்று மட்டும் அடையாளம் கூறப்பட்ட அப்பெண் பிரேசிலின் சாவோ பாலோ நகரிலிருந்து விமானம் ஏறியுள்ளார். ரோம் நகரின் லியானார்டோ டாவின்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது அவரைப் பார்த்த அதிகாரிகள் குழப்பமடைந்தனர்.

காரணம், வழக்கமாக பெண்களுக்கு இருப்பதை விட மிகப் பெரிய சைஸில் அவரது மார்பகங்கள் இருந்ததே. அதேபோல அந்தப் பெண்ணின் பின்புறம் வழக்கத்தை விட மிகப் பெரிதாக எடுப்பாக இருந்தது. இதையடுத்து அவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட அழைத்துச் சென்றனர். பெண் அதிகாரிகளை வைத்து சோதனையிட்டபோது அவர் தனது இயற்கை மார்பகத்திற்கு மேலே செயற்கையாக மார்பகத்தை செட்டப் செய்து அதற்குள் கொகைனை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

அதேபோல தனது பின்புறத்தையும் செயற்கையாக பெரிதாக்கி அதற்குள்ளும் கொகைனை வைத்திருந்தார் அப்பெண்.

இதையடுத்து கொகைனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அப்பெண்ணையும் கைது செய்தனர்.

English summary
A 33-year-old Spanish model was arrested at the Rome airport for attempting to smuggle 2.5 kg cocaine in prosthetic breasts. The model -- who arrived on a flight from San Paolo, Brazil, and identified by authorities only as M.F.M. -- was arrested on Wednesday after women detectives at Rome's Leonardo da Vinci airport found crystal white powder hidden in her fake breasts and bottom. The prominent size of the suspect's chest and posterior drew the attention of airport customs agents leading to the search, officials said.
User Comments
ragav 28 Dec 2011 06:26 pm
Hi any one interested in gay s** msg me ragav003@yahoo.in :)
milton kumar 27 Dec 2011 10:38 am
வர வர எதைத்தான் பையா யூஸ் பண்றதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சி...
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST