மோசமான வானிலை: தாமதாக சென்ற சென்னை-துபாய் எமிரேட்ஸ் விமான‌ம்

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 21, 2012, 17:20 [IST]
துபாய்: மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானம் காலதாமதாக புறப்பட்டுச் சென்றது.

சென்னையில் இருந்து தின‌மும் துபாய்க்கு எமிரேட்ஸ் விமான‌ம் (ஈகே 545 ) காலை 9.40 ம‌ணிக்கு புற‌ப்ப‌ட்டு ம‌திய‌ம் 12.25க்கு வ‌ந்து சேர்கிற‌து. நேற்று காலை சென்னையில் இருந்து சிறிது தாம‌த‌மாக‌ புற‌ப்ப‌ட்ட‌ விமான‌ம் கால‌நிலை கார‌ண‌மாக‌ மும்பையில் த‌ரை இற‌க்க‌ப்ப‌ட்ட‌து. பின்னர் சில‌ ம‌ணி நேர‌த்திற்குப் பிற‌கே மும்பையில் இருந்து புற‌ப்ப‌ட்டு துபாய்க்கு மாலை 5.57 வ‌ந்து சேர்ந்த‌து.

காலையில் 9.40 மணிக்கு புற‌ப்ப‌டும் விமான‌ம் என்ப‌தால் பெரும்பாலானோர் காலை 6.30 ம‌ணிக்கெல்லாம் சென்னை விமான‌ நிலைய‌ம் சென்றிருப்ப‌ர். ஏற‌த்தாழ‌ 10 ம‌ணி நேர‌ ப‌ய‌ண‌த்திற்குப் பிறகே விமானம் துபாய் வ‌ந்த‌டைந்த‌து. இத‌னால் ப‌ய‌ணிக‌ள் மிக‌வும் சோர்வுட‌ன் காண‌ப்ப‌ட்ட‌ன‌ர். பெண்க‌ளும், குழ‌ந்தைக‌ளும் மிக‌வும் சிர‌ம‌ப்ப‌ட்ட‌தாகத் தெரிவித்தன‌ர்.
English summary
Chennai-Dubai Emirates flight got delayed and landed in Mumbai for few hours before landing in Dubai because of bad weather. So, the passengers were left with no choice than to feel uncomfortable.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST