For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அபுதாபியில் பரத்வாஜ் கலந்து கொண்ட ஆட்டோகிராப் இசை நிகழ்ச்சி: பாரதி அமைப்பு ஏற்பாடு

By Siva
Google Oneindia Tamil News

Bharadwaj
அபுதாபி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரதி அமைப்பும், அபுதாபி இந்திய சமூக மற்றும் கலாச்சார மையமும் இணைந்து நடத்திய "ஆட்டோகிராப்" தமிழ் திரையிசைப் பயணம் என்ற பிரமாண்டமான இசை நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி அபுதாபியில் நடந்தது.

தமிழர் திருநாளாம் பொங்கல் நிகழ்ச்சியையொட்டி அபுதாபியில் பிரபல இசையமைப்பாளர் கலைமாமணி பரத்வாஜ் அவர்களின் "ஆட்டோகிராப்" தமிழ் திரையிசைப் பயணம் என்ற பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை அபுதாபி இந்திய சமூக மற்றும் கலாச்சார மையமும், பாரதி அமைப்பும் முதன்முறையாக இணைந்து வழங்கியது. இந்த நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி மாலை நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு அபுதாபி இந்திய சமூக மற்றும் கலாச்சார மையம் தலைவர் ரமேஷ் பணிக்கர், செயலாளர் அப்துல் சலாம், பாரதியின் தலைவர் இராமகிருஷ்ணன், செயலாளர் ஹலீல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமீரகத்திற்கான இந்திய தூதர் எம்.கே.லோகேஷ் மற்றும் இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தின் புரவலரும், அமீரகத்தின் பிரபல தொழில் அதிபரும், ஈ.டி.ஏ. அஸ்கான் மேலாளருமான அல்ஹாஜ் சையது எம். சலாஹுத்தீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த இசை நிகழ்ச்சியில் பின்னணிப் பாடகர்கள் முகேஷ், அனந்து, ஜெயா ராஜகோபால் மற்றும் பரத்வாஜ் அவர்களின் புதல்வி ஜனனி உள்ளிட்ட தமிழ்த்திரையிசை பிரபலங்ளும் அமீரகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்களும் இசைத்த இசைமழையில் அரங்கமே மகிழ்ச்சி வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது.

English summary
India social and cultural centre, Abu dhabi and Bharathi cultural association had jointly conducted "Autograph, a mega musical programme" in Abu Dhabi on january 13 ahead of pongal. Famous Kollywood music director Bharadwaj attended the functon and enthralled the audience.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X