
ஷார்ஜா: ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் தொழில்நுட்பக்குழு, கேரள மருத்துவ பட்டதாரிகள் சங்கம் மற்றும் ஷார்ஜா அரசின் ரத்த வங்கி ஆகியவை இணைந்து 11.07.2012 அன்று ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் ரத்ததான முகாமினை நடத்தின.
ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் தொழில்நுட்பக்குழுவின் நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர் சன்னி குரியன் ரத்ததான முகாமிற்கு தலைமை வகித்தார்.
இந்த முகாமில் 113 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்ததாக ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் தொழில்நுட்பக்குழு இயக்குநர் ஜெனரல் பிரியா தெரிவித்தார்.இந்திய கன்சல் (பாஸ்போர்ட்) ஏ.கே. பரத்வாஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த முகாம் ஷார்ஜா இந்திய வர்த்தக் மற்றும் தொழில்நுட்பக்குழு நடத்திய நான்காவது முகாமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.





















