For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூளையை உற்சாகப்படுத்தும் ஃபேஸ்புக், டிவிட்டர்: ஆய்வில் தகவல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Facebook and Twiiter
டல்லாக உணர்கிறீர்களா? அப்படியே கொஞ்சம் சமூக வலைத்தளங்களின் பக்கம் போய் வாருங்கள் உற்சாகம் ஊற்றெடுக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஃபேஸ்புக், டிவிட்டரில் தங்களைப் பற்றியே அடிக்கடி பெருமையாக எழுதுபவர்களின் மூளை உற்சாகமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பெருமை பேசுங்கள்

நாங்க எல்லாம் அப்பவே அப்பிடி... இப்ப கேக்கவா வேணும்... என்று அடிக்கடி பெருமை பேசுபவர்கள் இருக்கின்றனர். இப்படி தங்களைப் பற்றியே அடிக்கடி பெருமையடித்துக் கொள்பவர்களின் மூளை உற்சாகமடைகிறதாம்.

இது தொடர்பாக ஹார்வார்டு பல்கலைக்கழக நரம்பியல்துறை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.

‘ஃபேஸ்புக்', ‘ட்விட்டர்' போன்ற சமூக வலைதளங்களில் தங்களைப் பற்றி எழுதிக் கொண்டிருப்பவர்கள் உற்சாகமாக இருக்கிறார்களாம். சாப்பிடும்போதும், கைக்கு சம்பளப் பணம் வரும்போதும் மூளையில் உற்சாகம் ஊற்றெடுக்கிறதாம்.

உற்சாகத்தை தூண்டும் செக்ஸ்

ஒருவர் தன்னைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாகச் சொல்லும்போதும் அதே ஏரியா தூண்டுதலுக்கு ஆளாகிறதாம். இதனால் உற்சாகம் ஏற்படுகிறது. தாம்பத்ய உறவில் ஈடுபடும்போதும் மூளைக்குள் உற்சாகத்தை உருவாக்கும் ஏரியா தூண்டப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

English summary
Recent research by social psychologists suggests that a large and complex virtual social network (such as can exist on Facebook), combined with real face to face social interaction, creates and maintains a healthier brain.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X