Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வெள்ளிவிழா

Posted by:
Published: Monday, June 11, 2012, 12:44 [IST]

Fetna Silver Jubilee On July

தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைப் பேணவும், ஒழுகிப்போற்றவும் அமெரிக்காவில் செயல்பட்டுவரும் மிகப்பெரிய அமைப்பு வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைஎன்பதாகும்.

வடஅமெரிக்கக் கண்டத்திலுள்ள கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழ்ச்சங்கங்களையும் தமிழ் அமைப்புகளையும் தன்னுள்கொண்டு ஒருகுடையின்கீழ், நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகப் பேரவையானது கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக இயங்கிவருகிறது.

ஆண்டுதோறும் நாடளாவிய தமிழ்த் திருவிழாவைக் கொண்டாடிவருகிறது பேரவை. இவ்வாண்டு அதன் 25 ஆண்டு காலப் பணியையும் நிறைவுசெய்யும் ருட்டு, அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவினைத் தனது வெள்ளிவிழாவாக மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்ட்டிமோர் நகரில், சூலை மாதம் 6, 7, 8 ஆகிய நாட்களில் நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது.

இம்மூன்றுநாள் பெருவிழாவுக்குக் கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா எனப் பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடவுள்ளார்கள். ஒவ்வோர்ஆண்டும், அமெரிக்கத் தமிழ்த்திருவிழாவினைத் தமிழறிஞர் ஒருவருக்குச் சிறப்புச்செய்யும் வகையில் அவர்தம் பெயர்சூட்டிப் பெருமைப்படுத்திவருகிறது பேரவை. சென்றஆண்டு பெருமழைப்புலவர் பொ.வெ.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது.

அவ்வகையில் இவ்வாண்டு, பேரவையின் வெள்ளிவிழாவானது முனைவர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாகப் போற்றப்பட்டு அவர்தம் பணிகளை அமெரிக்கத் தமிழர்களுக்குக் கொண்டுசேர்க்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

"தமிழால்இணைவோம்! செயலால்வெல்வோம்!!" எனும் இயன்மொழியைக் கொண்ட அமெரிக்கத் தமிழ்த்திருவிழாவில், தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு போற்றும் முகமாகப் பலநிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

வாழும்கலைப் பயிற்சி சிறீசிறீ இரவிசங்கர் அவர்களின் உரையுடன் கூடிய பட்டறை, மூத்த தமிழறிஞர் மறைமலை இலக்குவனார் சொற்பொழிவு, கவனகக்கலைவித்தகர் கலைச்செழியன் பயிற்சி, இ.ஆ.பணியர் சகாயம் அவர்களின் எழுச்சியுரை, வீரத்தாய் வேலுநாச்சியார் நாடக நாட்டியம், ‘விஜய்டிவி' சிவகார்த்திகேயன் பல்சுவை நிகழ்ச்சி, இயக்குநர் சசி, முன்னணிநடிகர் பரத், முன்னணி நடிகை அமலாபால் மேடைநிகழ்ச்சி, கன்னடப் பைங்கிளி சரோசாதேவி, நாட்டுப்புறக்கலை ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரெண்டாபெக், எழுத்தாளர் எஸ். இராமகிருட்டினன் இலக்கியப்பாசறை, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் தலைமையில் கவியரங்கம், டி.கே.எசு. கலைவாணன் தமிழிசை நிகழ்ச்சி, சின்னக்குயில்சித்ரா, ஐங்கரன்குழுவினர் வழங்கும் மெல்லிசைநிகழ்ச்சி, உள்ளூர்க் கலைஞர்களின் கண்கவர் நாடக நாட்டியங்கள் என ஏராளமான பண்பாட்டுப் பொருண்மியங்கள் தாங்கிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.

இணையரங்குகளில் இணைஅமர்வுகளாக, தமிழ்த்தேனீப் போட்டிகள், தமிழிசைப் போட்டிகள், தமிழன் - தமிழச்சி 2012, முன்னாள்மாணவர் சங்கம், தொழில் முனைவோர் அரங்கம், மென்பொருள் கட்டமைப்பாளர் அரங்கம், அமெரிக்கத் தமிழ் இளையோர் சங்கமம், கவனகக்கலை நினைவாற்றல்பயிற்சி, தமிழ்மணம் இணையப்பட்டறை, வலைஞர்சங்கமம் தலானவையும் டம்பெறவுள்ளன.

2012 ஆம் ஆண்டிற்கான அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவானது, பேரவையின் வெள்ளி விழாவாகவும்அமைந்திருப்பதால்அமெரிக்காவின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான தமிழர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். விழா ஏற்பாடுகளை, வாசிங்டன்வட்டாரத் தமிழ்ச்சங்கம் சிறப்பாகச் செய்துவருகிறது. சூலை ஐந்தாம்நாள் மாலை தமிழிசைவிழா, விருந்தினர்மாலை எனத் துவங்கும் தமிழ்த்திருவிழா, சூலை 6, 7 ஆகியநாட்களில் முழுநாள்விழாவாக நடைபெறும். சூலை 8ம் நாள்காலை, இலக்கியக் கலைந்துரையாடலுடன் நிறைவுக்குவரும்.

விழாவுக்குப் பேரவை இணையதளத்தில் முன்பதிவுசெய்துகொள்ளவேண்டும். முன்பதிவு செய்துகொள்ளவும், பேரவைவிழாகுறித்தகூடுதல்தகவல்களைப் பெறவும்நாடவேண்டிய இணையதளமுகவரி: www.fetna.org

எழுத்தாளர் எசு.ராமகிருட்டினன், பதிவர்கள் புதுகை அப்துல்லா, கேபிள்சங்கர், ORB இராஜா முதலானோர் கலந்துகொள்ளும் பேசுபுக், ட்விட்டர், கூகுள்பிளசு, மின்னஞ்சல் குழுமப் பயனீட்டாளர்கள், வலைப்பதிவர்களுக்கான 'வலைஞர்சங்கமம்' நிகழ்ச்சியில் பங்கேற்க அதன் ஒருங்கிணைப்பாளர் பதிவர் பழமைபேசி: 980 322 7370.

தமிழிசை விழாவிலும், மாணவர்களுக்கான தமிழ்த்தேனீ போட்டிகளில் பங்கேற்க அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.பொற்செழியன் 314 249 0706

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தலைமையிலான கவியரங்க ஒருங்கிணைப்பாளர்,திரு.கார்த்திகேயன்தெய்வீகராசன்.கவியரங்கத்தில் பங்கேற்க விழைவோர்அவரைத்தொடர்புகொள்ள: 860 212 2398

‘விஜய்டிவி' புகழ் சிவகார்த்திகேயன் நடத்தும் விவாதமேடையில் பங்கேற்றுச் சிறப்பிக்க, அதன் ஒருங்கிணைப்பாளரான இரா.மனோகரன் அவர்களைத் தொடர்புகொள்ள: 267-421-2891 கூடுதல்தகவல்களைப் பெறவும், இதர செய்திகளுக்கும் தலைவர்மற்றும் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்புகொண்டு பேசலாம். முனைவர் தண்டபாணிகுப்புசாமி, தலைவர், வடஅமெரிக்கதமிழ்ச்சங்கப்பேரவை, 843-814-7581 திரு.பாலகன் ஆறுமுகசாமி, வெள்ளிவிழா ஒருங்கிணைப்பாளர், 301-237-1747

அமெரிக்காவின் நாட்டுப்பண்(national anthem) உயிர்த்த நகரமாம் பால்ட்டிமோர் நகரில் சற்றொப்ப இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கத் தமிழர்கள் ஒன்றுகூடி, இவ்வாண்டுக்கான தமிழ்த்திருவிழாவினைத் தங்களது பேரவையின் வெள்ளிவிழாவாகக் கொண்டாடும் பொருட்டுப் பேரவை முன்னணியினர் முனைப்பாகக் களப்பணியாற்றி வருகிறார்கள்.

நன்றி:

English summary
FETNA, Federation of Tamil association of North America is silver jubilee on July.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Chennai Super Kings: 7 / 0, 0.5 Overs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England: 180 / 6, 59 Overs
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Kings XI Punjab won by 50 runs