English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు

சுதந்திர தினம்: சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி நெல்லையில் துவக்கம்

நெல்லை: சுதந்திர தினத்தையொட்டி சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படம் மற்றும் வீர வரலாறு குறித்த கண்காட்சி நெல்லையில் துவங்கியது.

சுதந்திர தினத்தையொட்டி சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படம் மற்றும் வீர வரலாறு குறித்த கண்காட்சி நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தொடங்கியது. வரும் 23ம் தேதி வரை 10 நாட்கள் இக்கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியை சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் தம்பி மகன் அரிகரசுப்பிரமணியன் திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சிக்கு அரசு அருங்காட்சியாக காப்பாளர் கிருஷ்ணம்மாள் தலைமை வகித்தார். அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி, செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்காட்சியை காண ஏராளமான பள்ளி-மாணவி மாணவிகள் வந்திருந்தனர். இதில் வ.உ.சி., பாரதியார், வாஞ்சிநாதன், தூத்துக்குடி சாமுவேல், கலிங்கப்பட்டி பங்காருசாமி, கோவில்பட்டி சுப்பையா உள்ளி்ட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த சுதந்திர போராட்டத் தியாகிகளின் புகைப்படங்கள், அவர்களது தியாகப்பணிகள் குறித்த விபரங்கள் மற்றும் சுதந்திர போராட்ட காலங்களில் இருந்த கட்டிடங்கள் உள்ளிட்ட அபூர்வ படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

Published by:
English summary
Freedom fighters' photo exhibition was kick started in Tirunelveli on monday ahead of independence day. This exhibition will end on august 23.
ஆகஸ்ட் 14, 2012 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
 
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST  
User Comments
Tamizhan 15 Aug 2012 08:55 am
நல்ல செய்தி, நெல்லையில் இருக்கும் அனைவரும் இதற்கு ஆதரவு தர வேண்டும்!!!
Reply
[ கருத்தை எழுதுங்கள் ]
Oneindia  Oneindia Login
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST