
துபாய்: உலக நகைச்சுவையாளர் சங்க துபாய் கிளையின் ஜூன் மாத கூட்டம் ஆப்பிள் சர்வதேச பள்ளியில் நாளை நடக்கிறது.
உலக நகைச்சுவையாளர் சங்க துபாய் கிளையின் ஜூன் மாத நகைச்சுவைக் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு அல் கிஸஸ் ஆப்பிள் சர்வதேசப் பள்ளியில் நடைபெற இருக்கிறது.
நகைச்சுவை துணுக்குகளை வழங்க ஆர்வமுள்ள அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். மேடையேறத் தயங்குவோருக்கு இந்த நிகழ்ச்சி பயிற்சிக் களமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் hcidubai@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவிரியில் தொடர்பு கொள்ளலாம்.


















