
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம்(கே-டிக்) ரமலான் மாத சிறப்பு நிகழ்ச்சியாக பத்ரு யுத்தம்- இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியை வரும் 3ம் தேதி பகல் 11.55 மணிக்கு தமிழ் குத்பா பள்ளிவாசலில் நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க தலைவர் மவ்லவி அஷ்ஷைக் எம்.எஸ். முகம்மது மீராஷா தலைமை தாங்குகிறார். ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து துணை தலைவர் மவ்லவி அல் ஹாபீஸ் அஷ்ஷைக் எம். முகம்மது நிஜாமுத்தீன் பத்ரு யுத்தம்- இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
இதைத் தொடர்ந்து ரமலான் மாதம் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனி இட வசதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.










