Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

துபாயில் ர‌ம‌லானை வ‌ர‌வேற்க‌ முப்பெரும் விழா

Posted by:
Published: Saturday, July 14, 2012, 12:40 [IST]

Triplet Progamme Welcome Ramalan

துபாய்: துபாய் சுன்ன‌த் வ‌ல்ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வை ம‌ற்றும் ஜ‌மாஅத்துல் உலமா பேர‌வை சார்பில் ர‌ம‌லானே வ‌ருக‌! ர‌ஹ்மானே நிறைவ‌ருளை த‌ருக! நிகழ்ச்சி, தொட‌ர் சொற்பொழிவு நிறைவு நிக‌ழ்ச்சி ம‌ற்றும் ப‌ய‌ண‌ம் தொட‌ரின் 13வ‌து வார‌ சொற்பொழிவு உள்ளிட்ட‌ முப்பெரும் விழா 11.07.2012 அன்று மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் துபாயில் ந‌டைபெற்ற‌து.

ஈடிஏ டி.என்.எஸ். சீனிய‌ர் எக்ஸிகியூட்டிவ் டைர‌க்ட‌ர் ஏ. நூருல் ஹ‌க் விழாவுக்கு த‌லைமை வ‌கித்தார். அவ‌ர் த‌ன‌து த‌லைமையுரையில், ப‌ய‌ண‌த்தின் ப‌ல்வேறு ப‌டித்த‌ர‌ங்க‌ளை நினைவு கூர்ந்தார். சேல‌ம் நூருல் இஸ்லாம் அர‌பிக் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் எம். முஹ‌ம்ம‌து நூர் சிராஜி ஹ‌ஜ்ர‌த் ம‌ற்றும் பேராசிரிய‌ர் முஹ‌ம்ம‌து அன‌ஸ் ஆகியோர் சிற‌ப்புரை நிக‌ழ்த்தின‌ர்.

ப‌ய‌ண‌ம் என்னும் த‌லைப்பில் முஹிப்புல் உல‌மா முஹ‌ம்ம‌து ம‌ஃரூப் நிறைவுப் பேருரை நிக‌ழ்த்தினார்.

சாதிக் காக்கா, அஷ்ர‌ஃப் அலி, காய‌ல் மௌலானா ஆகியோர் இறை கீத‌ங்க‌ள் பாடின‌ர். லெப்பைக்குடிக்காடு மௌல‌வி தாவூத் அலி ம‌ன்ப‌யீ நிக‌ழ்ச்சியை தொகுத்து வ‌ழ‌ங்கினார். நிக‌ழ்விச்சியில் த‌மிழ‌க‌த்தைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. இர‌வு உண‌வுக்கும் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

English summary
Triplet programme to welcome the holy month of Ramalan was held in Dubai on july 11.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Chennai Super Kings: 114 / 1, 14 Overs