
துபாய்: அமீரக தமிழ்ச் சங்கம் குறும்பட போட்டியை நடத்துகின்றது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அமீரக தமிழ்ச் சங்கம் குறும்பட போட்டியை நடத்துகின்றது. மேலும் புரஸ்கார் விருதுகள் 2012 என்ற நிகழ்ச்சியையும் நடத்துகிறது. இந்த போட்டியில் சங்க உறுப்பினர்கள் தவிர பிறரும் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் http://www.uaetamilsangam.com/upcomingevent.asp என்ற இணையதளத்தில் இருந்து முன்பதிவு பாரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆக்ஸ்ட் 15ம் தேதி ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை uts@uaetamilsangam.com, uaetamilsangam@gmail.com, ramesh@uaetamilsangam.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கவும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை சமர்பிக்கலாம். ஒரு படத்தை சமர்பிக்க 300 திர்ஹம்(80$) கட்டணமாகச் செலுத்த வேண்டும். அமீரக தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் மட்டும் ஒரு படத்தை இலவசமாக சமர்பிக்கலாம். ஒன்றுக்கு மேல் சமர்பிக்க விரும்பும் உறுப்பினர்கள் படம் ஒன்றுக்கு 300 திர்ஹம்(80$) கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
போட்டியாளர்கள் தங்கள் குறும்படங்களை வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
சிறந்த குறும்படங்களுக்கான பரிசு விவரம்:
முதல் பரிசு- 1000 திர்ஹம்(280 $), விருது
இரண்டாம் பரிசு - 750 திர்ஹம்(205 $), விருது
மூன்றாம் பரிசு - 500 திர்ஹம்(135 $), விருது
இது தவிர அனுபவம் வாய்ந்த 3 இயக்குனர்களைக் கொண்டு சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர், நடிகை, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், சிறந்த பாடகர், பாடகி, பாடல் ஆசிரியர், குழந்தை நட்சத்திரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.
போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அமீரக தமிழ்ச் சங்கம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.





















