Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

துபாயில் வஹியாய் வந்த வசந்தம் நூல் வெளியீடு

Posted by:
Published: Sunday, July 29, 2012, 16:47 [IST]

Vahiyai Vantha Vasantham Released Dubai

துபாய்: துபாயில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு விழா 27.07.2012 அன்று மாலை கராமா பெங்களூர் எம்பயர் உணவகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில், ஜமாஅத்தின் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து இது போன்ற பணிகள் தொடர துஆச் செய்திட கேட்டுக் கொண்டார்.

பொதுச் செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். கௌரவ ஆலோசகர் எஸ். சம்சுதீன் துவக்கவுரை நிகழ்த்தினார்.

மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதர் ரமலான் மாதத்தின் முக்கியத்துவம் குறித்து விவரித்து நோன்பு திறப்பு துஆ ஓதினார்.

கௌரவ ஆலோசகர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் அவர்களது சேவைகளை நினைவு கூர்ந்து அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. துபாய் வெல்கேர் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் இஸ்மாயில், கனியின் தகப்பனார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இளையான்குடி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாவின் வஹியாய் வந்த வசந்தம் நூலை முதுவை ஹிதாயத் வெளியிட முதல் பிரதியை ஜாஹிர் உசேன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைராஜன் துபாயில் முதுகுளத்தூர் மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார்.

பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். துணை பொதுச்செயலாளர் ஹபீப் திவான் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை தலைவர் ஏ. அஹமது இம்தாதுல்லாஹ் தலைமையில் சாதிக், ஹபீப், கனி, ஜாஹிர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

English summary
Vahiyai Vantha Vasantham book was released in Dubai on july 27.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST