Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

துபாயில் தேசிய‌ சுற்றுச்சூழ‌ல் தின‌த்தையொட்டி ம‌ர‌ம் ந‌டு விழா

Posted by:
Published: Wednesday, February 6, 2013, 15:46 [IST]

Environment Day Celebration Attracts Large Crowd

துபாய்: துபாயில் அமீர‌க‌ தேசிய‌ சுற்றுச்சூழ‌ல் தின‌த்தையொட்டி ம‌ர‌ம் ந‌டு விழா 02.02.2013 அன்று த‌த்வீர் வேஸ்ட் டிரீட்மென்ட் வ‌ளாக‌த்தில் ந‌டைபெற்ற‌து. அமீர‌க‌ சுற்றுச்சூழ‌ல் தின‌ம் அமீர‌க‌ அதிப‌ர் ஷேக் க‌லீஃபா பின் ஸாயித் அல் ந‌ஹ்யான் அவ‌ர்க‌ளின் ஆத‌ர‌வுட‌ன் ஒவ்வொரு ஆண்டும் பிப்ர‌வ‌ரி 4ம் தேதி அனுச‌ரிக்க‌ப்ப‌டுகிற‌து.

த‌த்வீர் வேஸ்ட் டிரீட்மென்ட் சேர்ம‌ன் ஃப‌ரீஸ் ச‌யீத் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். சுற்றுச்சூழ‌ல் குறித்தும் அத‌னைக் காப்ப‌தில் ந‌ம‌து ப‌ங்கு குறித்தும் அர‌பு மொழி ம‌ற்றும் ஆங்கில‌த்தில் விரிவாக‌ விவ‌ரித்தார்.

த‌த்வீர் அலுவ‌ல‌க‌த்தில் ந‌டைபெற்று வ‌ரும் சுற்றுச்சூழ‌ல் முறைக‌ள் குறித்தும், குப்பைக‌ள் வ‌ருவ‌திலிருந்து அவை த‌ர‌ம் பிரித்து எவ்வாறு ம‌றுசீர‌மைப்பு செய்ய‌ப்ப‌டுகிற‌து என்ப‌த‌னை ப‌ள்ளி மாணாக்க‌ர்க‌ளுக்கு விள‌க்க‌ப்ப‌ட்ட‌து.

அத‌னைத் தொட‌ர்ந்து மாணாக்க‌ர்க‌ள் ம‌ர‌க் க‌ன்றுக‌ளை ந‌ட்ட‌ன‌ர். ஈடிஏ அஸ்கான் குழும‌த்தின் சார்பில் ந‌ல‌த்துறை அலுவ‌ல‌ர் காய‌ல் அஹ‌ம‌து சுலைமான் ம‌ர‌க்க‌ன்றுக‌ளை ந‌ட்டார். ப‌ங்குபெற்ற‌ அனைவ‌ருக்கும் சான்றித‌ழ்க‌ளும், நினைவுப் ப‌ரிசும் அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

இந்நிக‌ழ்விச்சிக்கு துபாய் முனிசிபாலிட்டியுட‌ன் இணைந்து சினெர்ஜி என‌ப்ப‌டும் ப‌ள்ளி மாணாக்க‌ர்க‌ளைக் கொண்டு செய‌ல்ப‌ட்டுவ‌ரும் இள‌ம் சுற்றுசூழ‌ல் ஆர்வ‌லைக் கொண்ட‌ அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த‌து.

English summary
Students and grown ups planted saplings in the premises of Tadweer waste treatment plant ahead of environment day. Dubai municipality in assocation with Synergy arranged for this programme.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter