ஹாங்காங்: ஹாங்காங்கில் வரும் மார்ச் மாதம் 3ம் தேதி கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற தலைப்பில் நகைச்சுவை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.
ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழகம் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற நகைச்சுவை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் 3ம் தேதி ஹாங்காங்கில் உள்ள அருங்காட்சியக அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் நகைச்சுவை பேச்சாளர் ரோபோ சங்கர், சேது, டைனோசர் ராஜனா, வடிவேல் பாலாஜி ஆகியோர் பங்கேற்று பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கவிருக்கின்றனர்.


















