Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

துபாயில் நடந்த மீலாத் பேச்சுப் போட்டி

Posted by:
Published: Friday, January 18, 2013, 15:04 [IST]

Milad Oratiorical Competition Held In Dubai

துபாய்: துபாய் ஈமான் அமைப்பு வ‌ருட‌ந்தோறும் மீலாத் பெருவிழாவினையொட்டி அனைத்து ச‌மூக‌த்தின‌ரும் ப‌ங்கேற்கும் வ‌கையில் ந‌ட‌த்தி வ‌ரும் பேச்சுப் போட்டி 11.01.2013 அன்று மாலை அல் த‌வார் ஸ்டார் சர்வதேச ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து.

நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் பொதுச் செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ லியாக்க‌த் அலி த‌லைமை வ‌கித்தார். அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். விழாக்குழு செயலாளர் கீழை ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைப் பொதுச் செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார். அத‌னைத் தொட‌ர்ந்து போட்டியின் விதிமுறைக‌ளை விள‌க்கிக் கூறினார். நிக‌ழ்வின் அறிமுக‌வுரையினை கோட்டாறு சாதிக் வ‌ழ‌ங்கினார்.

சிற‌ப்பு விருந்தின‌ராக‌ வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் அல்ஹாஜ் எம் அப்துல் ர‌ஹ்மான் ப‌ங்கேற்றார். புர‌வ‌ல‌ர் அல்ஹாஜ் ஷேக் தாவூது காக்கா வாழ்த்துரை வ‌ழ‌ங்கினார்.

முத‌ல் ப‌ரிசாக‌ ஈடிஏ அஸ்கான் நிறுவ‌ன‌ம் வ‌ழ‌ங்கிய‌ விமான‌ டிக்க‌ட்டை ஈடிஏ பெனாசிர் பாத்திமாவும், இர‌ண்டாவ‌து ப‌ரிசாக‌ அரேபியா ஹோல்டிங்ஸ் நிறுவ‌ன‌ம் வ‌ழ‌ங்கிய க‌ல‌ர் டிவியினை ஜெஸிலா பானுவும், மூன்றாம் ப‌ரிசாக‌ லேண்ட்மார்க் நிறுவ‌ன‌ம் வ‌ழ‌ங்கிய த‌ங்க‌ காசை ர‌ஸீம் ஆகியோரும் பெற்ற‌ன‌ர்.

அல் ஹ‌ஸீனா நிறுவ‌ன‌ம் வ‌ழ‌ங்கிய ஆறுத‌ல் ப‌ரிசுக‌ளை ஹ‌பிபுல்லா, இஸ்ர‌த் ஃப‌ரிதா, முஹ‌ம்ம‌து இப்ராஹிம், சுபான், ர‌ஃபிக் சுலைமான், மெரிட்கான் முஸ்தபா, ராஜி ராஜேந்திர‌ன் ஆகியோரும், ம‌ஸ்ரிக் இன்ட‌ர்னேஷ‌ன‌ல் வ‌ழ‌ங்கிய ஜெனார்ட் கைக்கடிகார‌த்தினை முஹ‌ம்ம‌து இப்ராஹிம், முஹ‌ம்ம‌து இக்பால், ந‌பிலா ஃபைஜியா, விருதை மு. சைய‌து ஹுசைன், ந‌ஸ்ருதீன், முஹ‌ம்ம‌து ஹாஜா க‌மாலுதீன், மோனா முஹ‌ம்ம‌து அன்வ‌ர் ம‌ற்றும் அபுப‌க்க‌ர் சித்தீக் ஆகியோரும் பெற்ற‌ன‌ர்.

போட்டியின் ந‌டுவ‌ர்க‌ளாக‌ அய்மான் அமைப்பின் த‌லைவ‌ர் அதிரை சாகுல் ஹ‌மீது, உணர்வாய் உன்னை த‌ன்னம்பிக்கை நிக‌ழ்ச்சியின் ப‌யிற்சியாள‌ர் த‌ஞ்சை ஜ‌லாலுதீன், உட‌ன்குடி மௌல‌வி ஹாபிஸ் அப்ஸ‌லுல் உல‌மா குத்புதீன் ஆலிம் ச‌த‌க்கி ஆகியோர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

ம‌க்க‌ள் தொட‌ர்பு ம‌ற்றும் ஊட‌க‌த்துறை செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த் ந‌ன்றி கூறினார். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் முஹைதீன், மதுக்கூர் ஹிதாயத்துல்லா, ஃபைஜுர் ரஹ்மான், சாதிக் பாட்சா, வி களத்தூர் ஷாகுல் ஹமீது, வி களத்தூர் ஷர்புதீன், முபாரக் அலி, சலாஹுதீன், மணமேல்குடி அம்ஜத்கான், தமீம் அன்சாரி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

English summary
Oratorical competiton was conducted in Dubai on january 11 ahead of Mild-un-Nabi. Benazir Fathima won the first prize.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Mumbai Indians won by 4 wickets
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.