
துபாய்: துபாய் அதிபர் ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூமின் ஆதரவில் ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கியின் மாரத்தான் 2013 எனும் நீண்ட தூர ஓட்டப் போட்டி பனி படர்ந்த காலை வேளையில் 25.01.2013 அன்று நடைபெற்றது.
42.195 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இப்போட்டியில் உலகின் முன்னணி ஓட்டப்பந்தய வீரர்கள் பலர் பங்கேற்றனர். ஓட்டப்பந்தய வீரர்களுக்கு உதவிடும் வகையில் ஈடிஏ அஸ்கான் குழும நலத்துறை அலுவலர் காயல் அஹமது சுலைமான் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழு சேவையில் ஈடுபட்டது.
இப்போட்டியில் 20,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















