
ராசல் கைமா: ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வரும் ராசல் கைமா தமிழ் மன்றத்தின் சார்பில் பொங்கல் விழா 25.01.2013 அன்று மாலை இந்தியன் சங்க வளாகத்தில் வெகு சிறப்புற நடைபெற்றது.
ராசல் கைமா தமிழ் மன்ற தலைவர் அஜ்மல் தலைமை வகித்தார். செயலாளர் பூபதி வரவேற்புரை நிகழ்த்தினார்.
அசத்தப் போவது யாரு புகழ் தேவகோட்டை ராமநாதன் நகைச்சுவை நிகழ்ச்சியை வழங்கி அரங்கினை அதிர வைத்தார். திருச்சி சரவணகுமார் ரஜினிகாந்த், கமல், பவர் ஸ்டார் எனப் பலகுரலில் பேசி அசத்தினார்.
கலைமாமணி விருது பெற்ற ஓவியர் ஆவுடையப்பன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.
பேராசிரியர் பழனி மற்றும் அவரது மனைவி முனைவர் சங்கீதா ஆகியோரின் காமெடி கலாட்டா பார்வையாளர்களை பரசவப்படுத்தியது. பிரசித்தம் குழுவினரின் நடன நிகழ்ச்சி மற்றும் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரசன்னா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அதிர்ஷ்ட குலுக்கலில் தேர்வு பெற்றோருக்கும், விழாவுக்கு அணுசரனை வழங்கியோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான அணுசரனையினை ஈடிஏ துபாய், அபுதாபி, எலக்ட்ரோ ராக், பேங்க் ஆஃப் பரோடா, அராபியா டாக்ஸி, ஏ.பி. பாவா, எமிரேட்ஸ் ஸ்டீவ்டோரிங், கல்ஃ காங்கிரீட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் செய்திருந்தன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள அஜ்மல், பூபதி, ஸ்ரீதர், குருமூர்த்தி, மாசானா ராஜ், ஹபிபுல்லா, ஹாஜா, ஃபாரூக் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.


















