காதல் வயப்பட்டவர்களும், காமம் வயப்பட்டவர்களும் நேரில் சந்திக்கும்போது செய்யும் முதல் செயல் - கட்டி அணைப்பது, தழுவிக் கொள்வது, முத்தமிட்டுக் கொள்வதுதான். ஆனால் இதையெல்லாம் அவர்கள் ஏன் செய்கிறார்கள் என்று என்றாவது யோசித்திருப்பீர்களா... ஆனால் இதற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கி வந்து விட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நமது தோலில் உள்ள உணர்வு செல்கள் மூலமாகத்தான் இந்த தழுவல் நிகழ்ச்சி தூண்டப்பட்டு நடப்பதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாம். இந்த உணர்வு செல்கள்தான் ஒருவரை கட்டி அணைக்குமாறு தூண்டுவிக்கிறதாம்.
மனிதர்கள் முதல் பூனை வரை அத்தனை மனிதர்கள், விலங்குகளுக்கும் இது ஒரே மாதிரியான நிகழ்வாகவும் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.



































