Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஜோடி தேடுறீங்களா... குளிரை விட கோடைதான் பெஸ்ட்!

Posted by:
Published: Friday, February 1, 2013, 11:34 [IST]

மழைக்காலத்தை விட கோடை காலத்தில்தான் நமக்கேற்ற பெண்களை ஈசியாக தேர்வு செய்ய முடியுமாம். இப்படிக் கூறுகிறது ஒரு ஆய்வு. அதேபோல மழைக்காலம், குளிர்காலங்களை விட கோடை காலத்தில்தான் பெண்களை எளிதாக அணுக முடிகிறதாம்.

சோஷியல் இன்ப்ளூயன்ஸ் என்ற இதழ் நடத்திய ஆய்வில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலம், குளிர்காலத்தை விட வெயில் காலத்தில்தான் பெண்களிடம் எளிதாக பழகி நட்பு பிடிக்க முடிகிறது என்று இந்த ஆய்வு சொல்கிறது.

பலர் மழைக்காலத்தில் பலமுறை முயன்றும் கூட பெண்களின் நட்பை சம்பாதிக்க முடியாமல்சோர்ந்து போய் விடுகிறார்களாம். ஆனால் அவர்கள் வெயில் காலத்தில் முயற்சியைத் தொடர்ந்தால் வெற்றி கிடைக்குமாம்.

கோடையில் போன் நம்பர்

பல பெண்கள் கோடை காலத்தில்தான் தங்களது போன் நம்பர்களை ஆண் நண்பர்களுக்குத் தருகிறார்களாம். இதற்கு என்ன காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை இந்த ஆய்வு.

ஆண்களைப் பழக விட்டு ஆய்வு

இந்த ஆய்வை நடத்திய பிரெஞ்சு ஆய்வாளர்கள், கவர்ச்சிகரமான ஆண்களைத் தேர்வு செய்தனர். பின்னர் அவர்களை 500 பெண்களிடம் பழக அனுப்பி வைத்தனர். இரண்டு நகரங்களில் கடந்த மே மற்றும் ஜூன் மாதம் இந்த ஆய்வு நடைபெற்றது.

குறைந்த வெப்ப நிலை - அதிக வெப்பநிலை

குறைந்த தட்பவெப்பம் நிலவிய நாளிலும், அதிக வெயில் அடித்த நாளிலும் இந்த ஆய்வுக்காக ஆண்கள் அனுப்பப்பட்டனர்.

காலை முதல் மதியம் வரை ஒரு குரூப்

காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரையிலான நேரத்தில் ஐந்து பேர் கொண்ட குழுவை ஒரு இடத்திற்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்தனர். இவர்கள் பெண்களை அணுகி அவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு ஐஸ் வைத்துப் பேசி நட்பு பிடிக்க முயற்சித்தனர்.

வெயில் நேரத்தில் நம்பர் கொடுத்த பெண்கள்

இப்படி போன ஆண்களிடம் நல்ல வெயில் அடித்த நாட்களில்தான் பெரும்பாலான பெண்கள் அதாவது 20 சதவீதத்திற்கும் மேலான பெண்கள் ஆண்களின் நட்பை ஏற்றுக் கொண்டு தங்களின் மொபைல் எண்களைக் கொடுத்தார்களாம். 13.9 சதவீதம் பேர் மட்டுமே வெயில் குறைவாக அடித்த நேரத்தில் மொபைல் எண்களைக் கொடுத்தனராம்.

இது பிரான்சில் நடந்த ஆய்வு.. நம்ம ஊர் கணக்கு எப்பவுமே வித்தியாசமாகத்தானே இருக்கும்.

 

English summary
If you're looking for love to alleviate the January blues but finding you're having no luck, it might be better to hold off until the sun comes out. According to a new study published in the journal Social Influence, ladies are more likely to give out their phone numbers on sunny days as opposed to cloudy ones.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter