Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

துபாயில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கு வரவேற்பு

Posted by:
Published: Monday, February 18, 2013, 14:26 [IST]

Vck Functionaries Given Warm Welcom In Dubai

துபாய்: துபாயில் அமீர‌க‌ காயிதே மில்ல‌த் பேர‌வையின் சார்பில் விடுத‌லைச் சிறுத்தைக‌ள் க‌ட்சியின் மாநில‌ நிர்வாகிக‌ளுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி 11.02.2013 அன்று மாலை மெட்ராஸ் வெஜிடேரிய‌ன் உணவ‌க‌த்தில் ந‌டைபெற்ற‌து.

வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சிக்கு அமீரக‌ காயிதே மில்ல‌த் பேர‌வையின் பொதுச் செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா த‌லைமை வ‌கித்தார். அவ‌ர் த‌ன‌து த‌லைமையுரையில், இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் ம‌ற்றும் விடுத‌லைச் சிறுத்தைக‌ள் க‌ட்சிக்கும் இடையேயுள்ள‌ இண‌க்கமான‌ உறவு குறித்தும் பொதுவான‌ விஷ‌ய‌ங்க‌ளில் இரு க‌ட்சியின‌ரும் இணைந்து செய‌ல்ப‌ட‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌ம் குறித்தும் விவ‌ரித்தார்.

சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளாக‌ விடுத‌லைச் சிறுத்தைக‌ள் க‌ட்சியின் மாநில‌ப் பொருளாள‌ர் முஹ‌ம்ம‌து யூசுஃப், இஸ்லாமிய‌ ஜன‌நாய‌க‌ப் பேர‌வையின் மாநில‌ நிதிச் செய‌லாள‌ர் ஜெ. முகம‌து முபார‌க் ஆகியோர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

ஏற்புரை நிக‌ழ்த்திய‌ முஹ‌ம்ம‌து யூசுஃப், க‌ட‌ந்த‌ ச‌ட்ட‌மன்ற‌ தேர்த‌லில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தன‌க்கு ஒத்துழைப்பு ந‌ல்கிய‌ தாய்ச் ச‌பையின‌ருக்கு ந‌ன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் ச‌மூக‌ ந‌ல்லிண‌க்க‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு தள‌ங்க‌ளில் த‌ங்க‌ள‌து ஒத்துழைப்பு என்றும் இருக்கும் என்றார்.

நிக‌ழ்ச்சியில் தேரா டிராவ‌ல்ஸ் மேலாள‌ர் ஹாஜா முஹைதீன், இக்பால், முதுவை ஹிதாய‌த், தாய்ம‌ண் வாச‌க‌ர் வ‌ட்ட‌த்தின் செ.ரெ.ப‌ட்ட‌ண‌ம் ம‌ணி, க‌ருணாநிதி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் கலந்து கொண்டனர்.

English summary
VCK functionaries who went to Dubai were given warm welcome by UAE Kaithe Millath Peravai on february 11.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
New Zealand: 153 / 4, 49.4 Overs
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 23 runs