For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலால் பாதிக்கப்படுவோருக்காக காதலர் தினத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சி!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்க, அன்றைய தினம் சத்தமின்றி ஒரு நல்ல விஷயம் ஆரம்பமானது, சென்னையில்.

காதலால் பாதிக்கப்பட்டோர், காதலால் ஏற்படும் இன்னல்களை எதிர்கொள்வோருக்கு அவற்றையெல்லாம் கையாளும் முறைகளைக் கற்றுத் தர காதல் போற்றுதும் என்ற சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் அரங்கேறியது.

சென்னை வானகரத்தில் அமைந்துள்ள மனசாஸ்த்திரா ஒருங்கிணைந்த மனநல மருத்துவமனை மூலமாக "மனசாஸ்த்திரா அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம்" அமைக்கப்பட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்றிருக்கும் மக்களுக்கான இந்த இலவச மையத்தை மருத்துவமனையின் முதல்வர் ஸ்ரீராம் உருவாக்கியுள்ளார்.

இந்த மனசாஸ்த்திரா அரங்கத்தில்தான் பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்தை முன்னிட்டு "காதல் போற்றுதும்" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சி மாணவர்கள் காதல் என்ற பெயரில் அடையும் இன்னல்கள் மற்றும் கையாளும் முறைகள் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி இன்றைய பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேவையான மிக முக்கியமான ஒன்று என வந்திருந்த அனைத்து தரப்பினரும் தெரிவித்தனர்.

பல்வேறு கல்லூரி முதல்வர்களும் தங்கள் மாணவர்களை இந்நிகழ்ச்சியில் பங்குபெற செய்து தங்கள் ஒத்துழைப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

A special programme for love failure youths

மாணவர்களுக்காக பலதரப்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்கப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதில் முக்கிய நிகழ்ச்சியாக மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி
மிக எளிமைமாக மாணவர்களைகளை நல்வழிப்படுத்தும் நோக்கில், பல்வேறு கருத்துகளைக் கூறினார்.

சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் ஞானி, அருட்தந்தை ஜெகத் கஸ்பர் ( நாம் அமைப்பு), கவிஞர்- திரைப்பட இயக்குனர்- எழுத்தாளர் சந்திரா, புகைப்பட நிபுணர் ப்ரின்ஸ் மற்றும் விஜய் தொலைக்காட்சி ஆஃபிஸ் தொடர் நடிகர்கள் கார்த்திக், விஷ்ணு ஆகியோர் பங்கேற்றனர்.

English summary
Kathal Potruthum, a special programme held at Manashastra, Vanagaram on Valentine's Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X