For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மவுத் வாஷ் பயன்படுத்தினால் ஹார்ட் அட்டாக் வருமாம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்காக தினசரி இருவேளை மவுத்வாஷ் உபயோகிப்பவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

காரணம் மவுத்வாஷ் பயன்படுத்தும் போது அதில் உள்ள ரசாயனங்கள் பற்களிலும், ஈறுகளிலும் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் கொன்று விடுகின்றனவாம்.

லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

ஆரோக்கியமான நபர்களை ஆய்வு செய்து பார்த்த போது அவர்களின் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. காரணம் அவர்கள் தினசரி இரண்டு நேரம் மவுத்வாஷ் உபயோகிப்பவர்கள் என்று தெரியவந்தது.

புற்றுநோய் ஆபத்து

புற்றுநோய் ஆபத்து

அதேபோல வாய்க் கொப்பளிக்கும் மவுத்வாஷ்களை நீண்ட காலமாக பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள்

ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள்

இதுதொடர்பாக, இரண்டு நாடுகளின் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் வெளியாகின. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைகழகமும், மெல்போர்ன் பல்கலைக்கழகமும் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.

9 மடங்கு அதிகம்

9 மடங்கு அதிகம்

பற்சிதைவு, வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த பிரபலமான பல மவுத்வாஷ்கள் உள்ளன. அவை பயன் அளித்தாலும், குறுகிய காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து மவுத்வாஷ் பயன்படுத்துவோருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட 9 மடங்கு வாய்ப்புள்ளது.

மது அருந்துபவர்களுக்கு…

மது அருந்துபவர்களுக்கு…

புகைபிடிப்பவர்களுக்கு இது பல மடங்கு புற்றுநோய் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. மது அருந்துவோருக்கு 5 மடங்கு அபாயம் உள்ளது. எனவே, மவுத்வாஷ்களை குறுகிய காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஆய்வில் கூறப்பட்டது.

ஆல்கஹால் மவுத்வாஷ்

ஆல்கஹால் மவுத்வாஷ்

ஆல்ஹலால் கொண்ட மவுத்வாஷ்களைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் அபாயம் மட்டுமின்றி வாயில் எரிச்சல் உணர்வு, வறட்டுத்தன்மை, வலி ஆகியவையும் ஏற்படலாம். மவுத்வாஷில் ஆல்கஹால் சேர்ப்பதால் எந்தப் பயனுமில்லை என்பதை அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் உணர வேண்டும் என்றும் ஆய்வில் கூறப்பட்டது

நோயாளிகளுக்கு விழிப்புணர்வு

நோயாளிகளுக்கு விழிப்புணர்வு

இங்கிலாந்தின் நியூகேசில் பல்கலைக்கழக ஆய்வில், ‘ஆல்கஹால் உள்ள மவுத்வாஷ்களைப் பயன்படுத்தினால் வாய் புற்றுநோய் ஏற்படலாம். எனவே, அவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க நோயாளிகளுக்கு பல் டாக்டர்கள் அறிவுறுத்த வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Certain types of mouthwash can kill off 'good' bacteria in the mouth, spiking blood pressure and increasing the risk of heart attacks and strokes, scientists, including one of Indian-origin, have warned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X