For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"குறுந்தொகை" - அசாமிய மொழிபெயர்ப்பு வெளியீடு

By Mathi
Google Oneindia Tamil News

குவஹாத்தி: சங்ககால இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகை முதல்முறையாக அசாமிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

பிரபல அஸ்ஸாமிய கவிஞரும், சாகித்ய அகாதெமியின் இளம் எழுத்தாளர் விருது பெற்றவருமான பிஜோய் பர்மன் குறுந்தொகையை அசாம் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

இந்தப் புத்தகத்தை வெளியிட்டு பேசிய எழுத்தாளர் பிரதீப் ஆசார்யா, அசாமிய கலாசாரத்தோடு ஒத்த தமிழ் கலாசாரத்தின் வெளிப்பாடுகளை, இப்புத்தகத்தில் வெற்றிகரமாகக் கொண்டு வந்துள்ளார் எனப் பாராட்டினார்.

60 செய்யுள்களை உள்ளடக்கிய, மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்தைய நூலான குறுந்தொகையை மொழிபெயர்ப்பதற்கு, பிஜோய் பர்மன் 10 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அசாம் மற்றும் தமிழக கலாசாரத்துக்கு இந்த நூல் ஒரு பாலமாக இருக்கும் எனவும் பர்மன் தெரிவித்தார்.

English summary
A poetry collection titled Kuruntokair Kabita – Assamese translation of an anthology of celebrated classical Tamil love poetry belonging to Sangam literature – was released at a function held at the National Book Trust (NBT) Book Promotional Centre on Saturday. The volume has been translated into Assamese by young poet Bijoy Sankar Barman. Litterateur Prof Pradip Acharya did the ceremonial release of the book.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X