For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூத்த பத்திரிகையாளர் ரா.அ.பத்மநாபன் காலமானார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Bharathi scholar R.A. Padmanabhan passes away
சென்னை: மூத்த பத்திரிகையாளர் ரா.அ.பத்மநாபன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 96. அவருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

ஆனந்த விகடன் இதழில் தனது 16-வது வயதில் பணியை துவக்கிய ரா.அ.பத்மநாபன் பின்நாளில் தினமணி கதிர் மற்றும் தி இந்து நாளிதழ்களில் பணியாற்றினார்.

ரா.அ.பத்மநாபன் பாரதியாரின் படைப்புகளில் பலவற்றைத் தொகுத்திருக்கிறார். பாரதி படைப்புகளில் ஆய்வுகளும் மேற்கொண்டார்.

சிறந்த எழுத்தாளரான பத்மநாபன், விவிஎஸ்.ஐயர், நீலகண்ட பிரமச்சாரி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாழ்க்கை சரிதத்தை எழுதியுள்ளார்.

'சித்திர பாரதி' என்ற பாரதியாரின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு முதன் முதலில் 1957.ல் இவரால் வெளியிடப்பட்டது. அதன் இரண்டாவது பதிப்பு 1982.லும் மூன்றாவது பதிப்பு 2006.லும் வெளியாகின.

English summary
Journalist and historian R.A. Padmanabhan, who made the single most important contribution to the studies on the great nationalist poet Subramania Bharathiyar, died at Chennai on Monday. He was 96 and is survived by his wife, three sons and three daughters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X