For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாறும் டிரெண்ட்! காதலிதான் முதலில் 'ஐ லவ் யூ' சொல்லனும் என விரும்பும் இந்திய இளசுகள்!!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய இளைஞர்களில் பெரும்பாலானோர் பெண்கள்தான் காதலை முதலில் வெளிப்படுத்த வேண்டும் என்று கருதுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்திய இளைஞர்களின் திருமண வாழ்க்கை குறித்த மன ஓட்டத்தை அறிந்துகொள்ள திருமண முன்பதிவு இணையதளம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது.

ஆறாயிரம் பேரிடம் ஆய்வு

ஆறாயிரம் பேரிடம் ஆய்வு

நாட்டிலுள்ள 6500 இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 25 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள்.

முக்காவாசி பசங்களுக்கு தொடை நடுக்கம்

முக்காவாசி பசங்களுக்கு தொடை நடுக்கம்

ஆய்வில் பங்கேற்றவர்களில் 71.7 சதவீதம் பேர், பெண்கள்தான் முதலில் ஐ லவ் யூ என்று கூறி, காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தனர். அதாவது, முதலில் காதலை சொல்ல ஆண்களுக்கு இருக்கும் பயத்தை மறைத்து பெண்கள் பின்னால் ஒளிந்துகொள்கின்றனர்.

பெண்களுக்கு வெட்கம் போச்சே..

பெண்களுக்கு வெட்கம் போச்சே..

இதில் 63.8 சதவீதம் பேர் பெண்கள் முதலில் ஐ லவ் யூ என்று கூற தயங்கமாட்டார்கள். அவர்கள் முன்போல அச்சம், மடத்துடன் இருப்பதில்லை. எனவே பெண்களே முதலில் சொல்வது நடைமுறையில் சாத்தியம்தான் என்று கூறினர்.

கூச்சம் இருக்குப்பா..

கூச்சம் இருக்குப்பா..

ஆனால் 36.2 சதவீதம் ஆண்கள், பெண்கள்தான் முதலில் காதலை வெளிப்படுத்தவேண்டும் என்று தாங்கள் விரும்பினாலும்கூட, பாரம்பரிய குணம் பெண்களை தடுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

போனில் சொன்னாலும் பரவாயில்லை

போனில் சொன்னாலும் பரவாயில்லை

காதலிகள் தங்களிடம் நேருக்கு நேர் முகம் பார்த்து ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்பதே 61.2 சதவீத இளைஞர்களின் விருப்பமாக உள்ளது. அதே நேரம், 21.4 சதவீதம் இளைஞர்கள், தங்களது காதலி போனில் இந்த மகிழ்ச்சி செய்தியை சொன்னாலும் பரவாயில்லை என்று கூறினர்.

வாட்ஸ் அப், பேஸ்புக் ஓகே

வாட்ஸ் அப், பேஸ்புக் ஓகே

9.8 சதவீதம்பேர் வாட்ஸ் அப் மூலமாகவும், 7.6 சதவீதம்பேர் பேஸ்புக் மூலமாகவும் காதலி தனது அன்பை தன்னிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினர். இவ்வாறு அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

English summary
Traditionally, it's the guys who pop the question to take a relationship forward but an increasing number of Indian men now prefer if women make the first move, according to a survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X