For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் மேடை நாடகம் நடத்தி வரும் தமிழ் குழு

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் தமிழ் நாடகத்தை திரையிட்டு கலக்கி வருகிறது இன்டஸ் கிரியேஷன்ஸ் என்ற லாப நோக்கமற்ற தமிழ் அமைப்பு. இந்த அமைப்பின், அடுத்த மேடை நாடகமான 'நினைத்தாலே நடக்கும்' வரும் 20ம்தேதி நடைபெற உள்ளது.

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் தமிழர்களால் இண்டஸ் கிரியேஷன்ஸ் என்ற மேடை நாடக குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அமெரிக்க தமிழர்கள் ரசனைக்காக அவ்வப்போது மேடை நாடகங்களை அரங்கேற்றி வருகிறது இக்குழு.

Indus creations have their next play on July 20 in America

இதுகுறித்து அக்குழுவின் உறுப்பினர் வித்யாசங்கர் கூறுகையில் "2006ம் ஆண்டு முதலே, தமிழ் மேடை நாடங்களை நடத்தி வருகிறோம். எங்கள் அமைப்பு லாப நோக்கமற்ற ஒன்றாகும். நாடக வருமானத்தை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்துவருகிறோம். சங்கரா கண் பவுண்டேஷன், கிரை, ஆஷா போன்ற அமைப்புகளுக்கு நாங்கள் நன்கொடை வழங்கி வருகிறோம். அடுத்த நாடகத்தை வரும் 20ம்தேதி நடத்த உள்ளோம்" என்றார்.

'நினைத்தாலே நடக்கும்' நாடகம், ரென்டன் ஐக்கிய பெர்பார்மிங் ஆர்ட்ஸ் சென்டர், 400 நார்த் வெஸ்ட் 2வது தெரு, ரென்டன், டபிள்யூஏ 98057 என்ற முகவரியில் நடக்க உள்ளது. 15 மற்றும் 20 டாலர் விலையில் டிக்கெட்டுகள் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு http://www.facebook.com/induscreations என்ற பேஸ்புக் முகவரியையோ அல்லது http://www.induscreations.org/ என்ற வெப்சைட் முகவரியையோ அணுகலாம்.

English summary
America's local theater play group called Indus creations is a Seattle based non-profit organization and have staged Tamil stage plays since 2006. they donate all their proceed + volunteer matching from Microsoft and Amazon to charity like Sankara Eye foundation, Cry, Asha etc. They have their next play on July 20.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X