For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவைத்தில் நடந்த 'பாஸ் பிளஸ்': மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி முகாம்

By Siva
Google Oneindia Tamil News

குவைத்: பல்வேறு சமூக நல பணிகளை செய்துவரும் குவைத் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் சார்பாக மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி முகாம் "பாஸ் பிளஸ்" நிகழ்ச்சி கடந்த 24ம் தேதி சிறப்பாக நடைபெற்றது.

சரியாக மாலை 3.30 மணிக்கு மாஸ்டர் ஹாதி அவர்களின் குர்ஆன் வசனங்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளியின் இயக்குனர் மதிப்பிற்குரிய மலயாளி மூசாகோயா அவர்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள்.

KIFF's 'Pass Plus' programme for students

அதை தொடர்ந்து அக்செஸ் இந்தியா தலைமை அதிகாரி திரு. தாயிஃப் அஹமத் பேசுகையில், மாணவர்கள் அனைவரும் தங்களுடைய உயர்ந்த இலக்கை நிர்ணயித்து, கவனச் சிதறல் ஏற்படாதவாறு படிப்பில் கவனம் செலுத்தி அதை அடைய வேண்டும். மேலும் மாணவர்கள் தன்னம்பிக்கை வளர கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் எடுத்துரைத்தார்.

அடுத்தபடியாக இயக்கோ அப்போலோ மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பாஸ்கர் குப்தா அவர்கள் மாணவ, மாணவிகளிடையே ஏற்படக்கூடிய ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகளை கூறி அதற்கான தீர்வுகளையும் எடுத்துரைத்தார். கேஐஎப்எப்-இன் தலைவர் ஷைஃபுதீன், மலபார் கோல்ட் அன்ட் டைமண்ட் கடையின் அதிகாரி திரு.லூக்மான் அலி அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தந்தனர். இறுதியாக உமன்ஸ் ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் தலைவர் சகோதரி. நதியா ஷீஹாப் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

English summary
Kuwait India Fraternity Forum arranged for a programme titled 'Pass Plus' for the students on january 24.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X