For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் பள்ளி மாணவர்கள் தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்த இஃப்தார் நிகழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் பள்ளி மாணவர்கள் தொழிலாளர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் நிகழ்ச்சி கடந்த 23ம் தேதி நடைபெற்றது.

துபாயில் கிரீன் குளோப் என்ற அமைப்பினை ஷார்ஜா பள்ளி மாணவர் ஹுமைத் அபுபக்கர் ஏற்படுத்தி சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இந்த அமைப்பின் மூலம் 23.07.2014 அன்று மாலை துபாய் சோனாப்பூர் ஈடிஏ ஜீனத் தொழிலாளர் முகாமில் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முழுக்க முழுக்க பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த இஃப்தார் நிகழ்ச்சியில் தொழிலாளர் முகாமில் உள்ள தொழிலாளர்கள் பங்கேற்றனர். மேலும் இளம் வயதில் சமூக சேவையாற்ற வேண்டும் என்ற அக்கறையில் செயல்பட்ட மாணவர்களை பாராட்டினர்.

ஈடிஏ நலத்துறை அலுவலர் அஹமது சுலைமான் ஷேக் ஹம்தார் விருது பெற்ற ஹுமைத் அபுபக்கரைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார். இஃப்தார் நிகழ்ச்சியைத் தொடர்ந்து மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

School students throw iftar party for labourers in Dubai

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் அஹமத் சுலைமான், முஸ்தபா, தமீம் அன்சாரி, அபுபக்கர், ரஹ்மத்துல்லா, ஃபைசல் உள்ளிட்டோர் உதவி புரிந்தனர்.

English summary
School students have arranged for an iftar party for the labourers in Dubai on july 23rd.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X