For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் சோப்பு... டூத் பேஸ்ட்... அதிர்ச்சி ரிப்போர்ட்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அன்றாடம் உபயோகப்படுத்தும் சோப்பு, சன்ஸ்கிரீன் லோசன், டூத்பேஸ்ட்களில் உள்ள ரசாயனங்களினால் ஆண்களின் விந்தணுக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று எச்சரிக்கின்றது.

அந்த சோப்பு போட்டு குளிங்க... பெண்களின் மனம் கவரலாம்... இந்த பேஸ்ட் போட்டு பல்துலக்குங்க... பெண்கள் உங்களின் அருகில் வருவார்கள்... உங்களுக்கு ஐ லவ் யூ சொல்வார்கள் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி பொருட்களை வாங்க வைக்கின்றனர்.

ஆனால் சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வதைப் போல அவற்றினை வாங்கி உபயோகிக்கும் ஆண்கள் மலடாகும் சூழல் ஏற்படுகிறது என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். காரணம் அவைகளில் உள்ள நச்சுத்தன்மையுள்ள ரசாயனங்கள்தான் என்கின்றனர்.

சோப்பு, டூத்பேஸ்ட்

சோப்பு, டூத்பேஸ்ட்

மனிதர்கள் அன்றாட வாழ்வில் பல பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றில் சோப்புகள், பற்பசைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மலட்டுத்தன்மை

மலட்டுத்தன்மை

குறிப்பாக, சோப்பு, பற்பசை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் கலக்கப்படும் நச்சு ரசாயன பொருட்களால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும் என தெரிய வந்துள்ளது.

குறையும் வீரியம்

குறையும் வீரியம்

இந்த ரசாயன நச்சு பொருட்கள் ஆண்களின் விந்தணு வீரியத்தை குறைத்து குழந்தை பேறு ஏற்படாமல் தடுக்கிறது. இது பலவிதமான ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு ஆபத்து

ஆண்களுக்கு ஆபத்து

சுற்றுச்சூழல் மாசுபாடு, மனஅழுத்தம், போதை வஸ்துக்கள், புகைப்பழக்கம் போன்றவைகளினால்தான் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படும் என்று ஆய்வுகள் கூறிவந்த நிலையில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களே ஆண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.

உற்பத்தி பாதிப்பு

உற்பத்தி பாதிப்பு

விந்தணு உற்பத்தியை தடை செய்யும் நச்சு ரசாயனங்கள் சோப்பு, டூத்பேஸ்டுகளில் உபயோகப்படுத்தப்படுவது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
Chemicals in common household products such as toothpaste, soap and plastic toys have a direct impact on human sperm which could help explain rising levels of male infertility, scientists have found.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X