For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிகமா டிவி பார்க்கறீங்களா? அப்போ உங்களுக்கு சீக்கிரமே சங்குதான்!

Google Oneindia Tamil News

டெல்லி: நீங்கள் அதிகமாக டிவி பார்க்கும் பழக்கம் உடையவரா? அப்படி என்றால் உங்கள் வாழ்நாள் குறையலாம் ஜாக்கிரதை என்கின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

யாரெல்லாம் அதிகமாக டிவி பார்க்கின்றார்களோ அவர்களுக்கு சொர்க்க பதவி மிக விரைவிலேயே கிடைத்து விடுகின்றதாம். அதுதாங்க இறப்பு.

அதுவும் சீரியல் பார்த்து யாரெல்லாம் அழுகின்றார்களோ அவர்களின் வாழ்நாள் அம்பேல்தான் என்கின்றது இந்த ஆய்வு.

ஆபத்து ஒளிஞ்சுருக்கு:

ஆபத்து ஒளிஞ்சுருக்கு:

வாழ்வில் உற்சாகம் தரும் ஒவ்வொரு பொருளும் நமது உடல் நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு டிவி மட்டும் விதிவிலக்கல்ல.

பொழுதுபோக்கு எமன்:

பொழுதுபோக்கு எமன்:

பொழுதுபோக்கு அம்சமாக நினைத்து அனைவரும் விரும்பிப் பார்க்கும் டிவி, உடல்நிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

ஆயுள் குறையும் கவனம்:

ஆயுள் குறையும் கவனம்:

இந்த ஆய்வுகளின் மூலம் அதிகம் டிவி பார்த்தால் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

22 நிமிடங்கள் போகும்:

22 நிமிடங்கள் போகும்:

நீங்கள் 25 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் நீங்கள் டிவி பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் உங்களின் வாழ்நாளில் 22 நிமிடங்களை இழக்கிறீர்கள் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

படுத்துக் கொண்டு பார்க்காதீங்க:

படுத்துக் கொண்டு பார்க்காதீங்க:

பெரும்பாலானவர்கள் படுத்துக் கொண்டே டிவி பார்க்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், சில வகையான புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றனவாம். இதன் விளைவாக இளம்வயதில் மரணமும் ஏற்படுகிறதாம்.

உடல் உழைப்பு அவசியம்:

உடல் உழைப்பு அவசியம்:

ஹார்ட் மற்றும் டையபட்டிஸ் இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த உடலியல் செயல்பாடு குறித்த ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரிகிட் லின்ச் இதுபற்றி, உடல் உழைப்பு குறைவது மனிதனின் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும். உடல் உழைப்பு இல்லாமல் போவதே இத்தகைய பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு காரணம்.

குறைவான ஆற்றலே தேவை:

குறைவான ஆற்றலே தேவை:

நீங்கள் நிற்கவோ அல்லது நடக்கவோ இல்லாமல் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தோ அல்லது படுத்துக் கொண்டோ இருப்பதால் உங்களுக்கு குறைவான ஆற்றலே தேவைப்படுகிறது.

வாழ்நாள் குறையும்:

வாழ்நாள் குறையும்:

இதனால் உடல் எடை அதிகரிப்பு, என்சைம் குறைபாடு, ரத்த ஓட்ட மாறுபாடு, தசைகளில் இருக்கம் போன்ற எல்லா பாதிப்புகளும் ஏற்பட்டு கடைசியில் உங்கள் வாழ்நாள் குறைந்து, எமனாக மாறிவிடுகின்றது டிவி என்று கூறியுள்ளார்.

கொஞ்சமா டிவி பாருங்க:

கொஞ்சமா டிவி பாருங்க:

அதனால் மக்களே டிவி பாருங்க...அதுவும் மனதுக்கு இதமான விஷயங்களை அப்போ, அப்போ பாருங்க. டிவியையே வாழ்க்கையா மாத்திக்காதீங்க. அப்போதான் உங்க உயிருக்கும் உத்தரவாதம்.

English summary
Watching TV a lot will reduce our life time. A new research says that it will change our metabolism of body, and reduce our life time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X