For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்களை விட பெண்களுக்கே அதிக மனஅழுத்தம் ஏற்படுதாம்! ஏன்?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஆண்களை விடவும் இளம்பெண்களே அதிகமான மன அழுத்ததிற்கு ஆளாவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம், ஆஸ்ட்ரோஜென் என்னும் பாலியல் ஹார்மோன் பெண்களின் மூளையில் ஏற்படுத்தும் மாற்றத்தால், அதிகமான ரத்தம் செலுத்தபட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றதாம்.

எம்.ஆர்.ஐ ஸ்கேன்

எம்.ஆர்.ஐ ஸ்கேன்

இந்த ஆய்விற்காக, 8 வயது முதல் 22 வயது வரை உள்ள இளைஞர்களின் மூளையிலுள்ள ரத்த ஓட்டத்தின் வளர்ச்சியை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் ஆய்வு செய்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அதிகரிக்கும் ரத்த ஓட்டம்

அதிகரிக்கும் ரத்த ஓட்டம்

இந்த ஆய்வில், தனது சூழ்நிலை மற்றும் உணர்வுகளை கையாளும்போது, பெண் மூளையின் ரத்த ஒட்டம் அதிகரிப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளம்பெண்களுக்கு மனஅழுத்தம்

இளம்பெண்களுக்கு மனஅழுத்தம்

இதுபோன்ற பாலியல் மாற்றங்கள், இளம்பெண்கள் பருவத்தை எட்டும்போது, அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், முரண்மூளை நோய் (schizophrenia), நரம்பியல் குறைபாடுகள், மனநல குறைபாடுகள் போன்ற நோய்கள் ஏற்படுவதாக, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தியோடர் சட்டெர்த்வைத் தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கும் பாதிப்பு

ஆண்களுக்கும் பாதிப்பு

பொதுவாக, பெண்களுக்கு அதிக அளவில் மனக் கவலையும் மன அழுத்தமும் ஏற்படுக்கின்றன. அதே போல், ஆண்களுக்கு முரண்மூளை நோய் போன்ற மூளை சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதாக சட்டெர்த்வைதே தெரிவித்தார்.

மூளையின் செயல்பாடு

மூளையின் செயல்பாடு

மேலும், அறிவுத்திறன் சார்ந்த செயல்களில் ஈடுபடும்போது, அச்செயல்கள் சார்ந்து மூளையிலுள்ள பகுதிகளில் ரத்த ஓட்டத்தின் அளவில் அதிகமான வேறுபாடுகள் தெரிவதாக பேராசிரியர் சட்டெர்த்வைதே குறிப்பிட்டார்.

இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பான விரிவான கட்டுரை, நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ் என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.

English summary
Women are more likely to suffer from depression and anxiety-related disorders because the sex hormone oestrogen drives more blood to the heads of young women compared to men.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X