EnglishবাংলাગુજરાતીHindiಕನ್ನಡമലയാളംతెలుగు
Filmibeat

கிரகங்களின் ராசி மாற்றம்: இந்த வார ராசி பலன் (26-09-2014 முதல் 02-10-2014 வரை)

Updated: Friday, September 26, 2014, 8:51 [IST]
 

- ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன்

இந்த வார ராசி பலன் (26-09-2014 முதல் 02-10-2014 வரை)

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - மாற்றம் இல்லை
செவ்வாய் - மாற்றம் இல்லை
புதன் - மாற்றம் இல்லை
குரு - மாற்றம் இல்லை
சுக்கிரன் - மாற்றம் இல்லை
சனி - மாற்றம் இல்லை
ராகு-கேது - மாற்றம் இல்லை

சந்திரன் -
28-09-2014 மாலை 05-22 க்கு விருச்சிகம்
30-09-2014 இரவு 11-44 க்கு தனுசு
02-10-2014 இரவு 03-31 க்கு மகரம்

 

மேஷம்

தன்னம்பிக்கை அதிகம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே...

அரசு அதிகாரிகளின் ஆதரவும் பெற்றோரின் அனுகூலமும் கிடைக்கும். மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும், வெளியூர் பயணம் ஏற்படும். வாகனங்களை கையாளுவதில் கவனம் தேவை.. தாய் மாமனுடன் வீண் விவாதத்தை தவிர்க்கவும்.

பண வரவில் தடை. விருந்து கேளிக்கை நிகழ்வுகள் மனதிற்கு சந்தோஷம் தரும். மற்றும் செலவினங்களை அதிகரிக்கும். உத்தியோகத்தில் தேக்க நிலை உருவாகும். எதிரிகள் அடிபணிவார்கள்.

28-09-2014 மாலை 05-22 முதல் 30-09-2014 இரவு 11-44 வரை சந்திராஷ்டமம். மனக் குழப்பம் உண்டாகும். முக்கிய முடிவுகளில் கவனம் தேவை.

காலபைரவருக்கு மிளகு சாதம் படைத்து வழி படுவது சிறப்பு.

 

ரிஷபம்

கலையார்வம் மிக்க ரிஷப ராசி அன்பர்களே
தாயாரின் அன்பும் அரவணைப்பும் மனதிற்கு இதம் தரும். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். தந்தையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

குடும்ப உறவில் கருத்து வேறுபாடு உருவாகும். உத்தியோகம் வியாபாரம் செழிப்படையும். வீட்டு உபயோகப் பொருட்கள் சேர்க்கை காரணமாக பணச் செலவு உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் கவனம் தேவை.

30-09-2014 இரவு 11-44 முதல் 02-10-2014 இரவு 03-31 வரை சந்திராஷ்டமம். பேச்சை குறைத்துக் கொள்வது வீண் விவகாரத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள உதவும்.

விஷ்ணு துர்க்கைக்கு அரளிப்பூ மாலை சாற்றி வழி படுவது சிறப்பு.

 

மிதுனம்

நுண்ணறிவு படைத்த மிதுன ராசி அன்பர்களே
செல்வச் சேர்க்கை அதிகரிக்கும், பொன்ஆபரணங்கள் சேரும் காலம். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் கவனம் தேவை மேலதிகாரிகளிடம் வீண் விவாதத்தை தவிர்க்கவும்.

வார ஆரம்பத்தில் மனசஞ்சலம் அதிகமாக இருக்கும், எதிர் பார்க்கும் சுப செய்தியில் தாமத நிலை நீடிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்வது சிறப்பு.

 

கடகம்

அன்பும் பிறரை அரவணைக்கும் குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே
மனதில் தைரியமும் உற்சாகமும் கரைபுரண்டு ஓடும். எதிர்பார்த்த காரியங்கள் தடையில்லாமல் நடைபெறும். தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் குதுகலம் நிலவும்.

முக்கிய முடிவுகளை வார இறுதியில் எடுக்கவும். நிலம் வீடு போன்றவைகளில் முதலீட்டை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் மந்த நிலை நீடிக்கும். புனித யாத்திரை ஏற்படும்.

குல தெய்வ வழிபாடு சிரமங்களை குறைக்க உதவும்.

 

சிம்மம்

மனோபலம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே
இந்த வாரம் இனிமையாக ஆரம்பிக்கும், செய் தொழில் சிறக்கும், கணவன்-மனைவி உறவு நிலை சீராக இருக்கும். குழந்தைகளால் வீண்விரயம் உண்டாகும்.

கல்வியில் மந்த நிலை இருக்கும் சூடான வார்த்தைகளை தவிர்க்கவும். மின்சாரம் நெருப்பு போன்ற வகைகளில் கவனம் தேவை. உடல் நலத்தில் கவனம் தேவை மருத்துவச் செலவுகள் உண்டாகும்.

பத்திரக்காளிக்கு எலுமிச்சம் பழம் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

 

கன்னி

வாக்கு சாதுரியம் மிக்க கன்னி ராசி அன்பர்களே
நிலம் வீடு சொத்துகள் வாங்குவதற்கு ஏற்ற காலம். மனதில் நினைக்கும் காரியங்கள் நிறைவேறும். திருமணத்தை எதிர் நோக்கும் அன்பர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.

வாகனச் சேர்க்கை உண்டாகும். கல்வி நிலை சீராக இருக்கும். அனைவரின் ஆதரவும் கிடைக்கும். அரசு விவகாரங்களில் கவனம் தேவை. இனம் புரியாத மந்த நிலை உருவாகும்.

விநாகயருக்கு அருகம் புல் மாலை சாற்றி வழிபடவும்.

 

துலாம்

நேர்மை தவறாத துலாம் ராசி அன்பர்களே

விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகள் மனதிற்கு இதம் தரும். அரசு அலுவலர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். வீண் அலைச்சல் உடல் நலத்தை பாதிக்கும். வீண் பேச்சு விவகாரத்தை உருவாக்கும்.

உத்தியோகத்தில் கணக்குவழக்குகளில் கவனம் தேவை. எதிரிகளை வெல்லும் திறன் உண்டாகும்.

நவ கிரகங்களுக்கு நவதானியம் படைத்து வழிபடுவது சிறப்பு.

 

விருச்சிகம்

தங்கள் காரியத்தில் கண்ணும் கருத்தும் மிக்க விருச்சிக ராசி அன்பர்களே
பெரியோர்களின் ஆசியும் ஆதரவும் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்.
பணவரவு சீராக இருக்கும்.

பூர்வீக சொத்து வகைகளில் லாபம் கிடைக்கும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தாய் மற்றும் தாய்மாமன் வகை உறவில் விரிசல் ஏற்படும்

மனைவி மற்றும் குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் நிமித்தம் பயணம் செய்ய நேரிடும். வார மத்தியில் ஆறுதல் கிடைக்கும்.

முருகப்பெருமானை பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.

 

தனுசு

வாழ்க்கை போராட்டத்தில் எதிர் நீச்சல் போடும் தனுசு ராசி அன்பர்களே
அரசு தொடர்பான காரியங்கள் எளிதில் நிறைவேறும், மறைமுக உதவிகள் கிடைக்கும். வார மத்தியில் மனகஷ்டம் உருவாகும். வாகனங்களை பராமரித்து கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

ஷேர் மார்க்கெட் கமிஷன் வகைகளில் ஏற்றம் காணலாம். எதிர்பாராத பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்களின் வரவால் செலவு ஏற்படும். தொழில் நிலை மேன்மை பெறும். வீடு பழுது பார்க்கும் நிலை உருவாகும்.

சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை செய்வது சிறப்பு.

 

மகரம்

விடாமுயற்சி கொண்ட மகர ராசி அன்பர்களே...
செய்தொழில் சிறக்கும். பணவரவு செல்வநிலை சிறப்பாக இருக்கும், விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கும் சுபிட்சமான காலம். மனதில் குதுகலம் உண்டாகும்.

புதிய வாகனம் நிலம் வீடு யோகம் உண்டு. வியாபாரத் தொடர்புகள் மேம்படும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. கண்டம் உண்டாக வாய்ப்பு உண்டு.

காலசம்ஹார மூர்த்தியை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

 

கும்பம்

நிறை குடமாக இருக்கும் கும்ப ராசி அன்பர்களே
கடவுள் உங்கள் பக்கம் இருக்கிறார். எவருடைய ஆதரவும் இல்லாத நிலை உருவாகும். அனைவருடனும் கருத்து வேறுபாடு உருவாகும். பேச்சில் கவனம் தேவை.

கணவன் மனைவியிடையே பிரச்சினைகள் நீங்கும்..வாழ்க்கை துணை பக்கபலமாக இருப்பார். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும்.

சரபேஸ்வரரை எலுமிச்சம் பழம் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

 

மீனம்

ஆழமான சிந்தனை கொண்ட மீன ராசி அன்பர்களே
கொடுக்கல் வாங்கல் மனதிற்க்கு சந்தோஷம் தரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.எல்லா விஷயங்களிலும் மாமன் உதவி கிடைக்கும்.சமயோசிதமான சிந்தனை வெற்றிக்கு வழி வகுக்கும். உடல் உஷ்ணம் மற்றும் நெருப்பு காயம் காரணமாக மருத்துவ செலவு ஏற்படும்.

நெருங்கிய உறவினருக்கு விபத்து ஏற்படும். வாழ்க்கை துணை வகையில் வீண்செலவு உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.

ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.

 

 

Tamil.oneindiaவின் புதிய Facebook ஜோதிட app-ஐ இன்னும் பயன்படுத்தவில்லையா?
Story first published:  Monday, October 8, 2007, 11:29 [IST]
English summary
thatstamil presents Weekly astrology forecast, free astrology, predictions and more. அனைத்து ராசிகள், நட்சத்திரங்களுக்கு தட்ஸ்தமிழ் வழங்கும் வார ராசி பலன்
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Videos You May Like