For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணினித் தமிழ் வளர்த்த மா.ஆண்டோ பீட்டர் மரணம்

Google Oneindia Tamil News

M Anto Peter
கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின் நிறுவுநரும்,கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் இன்று(12.07.2012) அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார்.

தந்தைபெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். உத்தமம் அமைப்பில் இணைந்து பணிபுரிந்தவர்.

மா.ஆண்டோபீட்டர் வாழ்க்கைக்குறிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தவர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். கணினி,இணையம்,அச்சத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மென்பொருள் தயாரிப்பு, இணையப்பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர். இவரின் மறைவு தமிழ் இணையத்துறைக்குப் பேரிழப்பு.

தமிழில் கம்ப்யூட்டர் குறித்த விழிப்புணர்வை தமிழர்களிடையே அதிகப்படுத்தியவர் ஆண்டோ பீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: மு. இளங்கோவன்

English summary
M.Anto Peter, who is instrumental to spread Tamil Comptuer among the Tamil masses is dead after a heart attack in this morning at his Chennai house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X