பெரும் குவஸார் மண்டலம் கண்டுபிடிப்பு..
இந் நிலையில் இதுவரையில் காணப்படாத அளவுக்கு மாபெரும் 'குவஸார்கள்' அடங்கிய ஒரு மண்டலத்தை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Large quasar group (LQG) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மண்டலத்தை கடக்கவே 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகிவிடுமாம்.
ஒளியின் வேகம் என்பது வினாடிக்கு 186,282 மைல்கள் அல்லது 3,00,000 கிலோ மீட்டர்கள். நமது சூரியனிலிருந்து கிளம்பும் ஒளி பூமியை அடைய 8 நிமிடங்கள் ஆகின்றன. அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான 1,50,000,000 கி.மீ. தூரத்தைக் கடக்க இவ்வளவு நேரம் ஆகிறது.
எவ்வளவு பெரிசு என்பதற்கு ஒரு உதாரணம்:
நமது பூமி, சூரியன் உள்ளிட்ட நட்சத்திர மண்டலம் இருப்பது மில்கிவே கேலக்சி எனப்படும் பால்வெளி மண்டலம். இதற்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு மண்டலம் ஆண்ட்ரோமெடா கேலக்சி. இந்த இரு மண்டலங்களுக்கும் இடையிலான தூரம் 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள். அதாவது நாம் ஒரு விண்கலத்தில் ஒளியின் வேகத்தில் பறந்தால் மில்கிவே கேலக்சியிலிருந்து ஆண்ட்ரோமெடா கேலக்ஸியை அடைய 2.5 மில்லியன் ஆண்டுகள் ஆகும்!.
வழக்கமாக இரு வேறு நட்சத்திர மண்டலங்களுக்கு இடையிலான தூரம் 6 முதல் 10 மில்லியன் ஒளி ஆண்டுகளாக இருக்கும். ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குவஸார் மண்டலத்தின் விட்டம் 4 பில்லியன் ஆண்டுகள், மில்லியன் அல்ல, பில்லியன். இப்போ புரியுதா எவ்ளவு பெரிசு என்பது (எங்க புரியுது?!).
புதிய சிந்தாங்களுக்கு வித்திடும்...
இதனால் இந்த புதிய மாபெரும் 'குவஸார்' மண்டலம் அண்டம் குறித்த கொள்கைகளை, சித்தாங்களை உலுக்கும் என்கிறார்கள் இங்கிலாந்தின் ராயல் அஸ்ட்ரனாமிகல் சொசைட்டி விஞ்ஞானிகள்.