For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விண்கற்களிடமிருந்து பூமியை பாதுகாப்பது எப்படி.. 'ஐடியா' கேட்கும் ஐரோப்பிய விண்வெளி மையம்!

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

ஒரு கால்பந்து மைதானத்தின் அளவு கொண்ட ஒரு மாபெரும் விண்கல் போதும்.. பூமியை புல் பூண்டு இல்லாத பாலைவனமாக மாற்ற.

இப்படிப்பட்ட ஒரு விண்கல் பூமியை நோக்கி பாய்ந்து வருவதாக வைத்துக் கொள்ளுங்கள். அதை தடுப்பது எப்படி, பூமியை காப்பது எப்படி என்ற ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் உள்ளன. இதையே கான்சப்டாக வைத்து டீப் இன்பேக்ட், ஆர்மெகாடன் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களும் வந்து போய்விட்டன.

'அபோபிஸ்' ஆபத்து:

'அபோபிஸ்' ஆபத்து:

குறிப்பாக அபோபிஸ் என்ற ஒரு விண்கல் வரும் 2036ம் ஆண்டு பூமிக்கு மிக மிக நெருக்கமாக வரப் போகிறது. இந்த விண்கல் பூமியில் மோதவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கான வாய்ப்பு 10 லட்சத்தில் ஒன்று தானாம். ஆனாலும் வாய்ப்புள்ளது என்பது உண்மையே.

அமெரிக்கா-ஐரோப்பா கூட்டு ஆராய்ச்சி:

அமெரிக்கா-ஐரோப்பா கூட்டு ஆராய்ச்சி:

இப்படிப்பட்ட ஒரு விண்கல் தாக்குதலில் இருந்து தப்ப அமெரிக்காவின் நாஸாவும், ஐரோப்பிய நாடுகளின் கூட்டு விண்வெளி ஆராய்ச்சி மையமான European Space Agency-ம் இணைந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றன.

அணுகுண்டுகளைக் கொண்டு தகர்ப்பது..

அணுகுண்டுகளைக் கொண்டு தகர்ப்பது..

இதில் முக்கியமான திட்டம் பூமியை நெருங்கும் விண்கல்லை அணுகுண்டுகள் கொண்ட ராக்கெட்கள் மூலம் தாக்கி சுக்குநூறாக்கி அழிப்பது.

லேசர்களை கொண்டு சிதறடிப்பது:

லேசர்களை கொண்டு சிதறடிப்பது:

மிக சக்தி வாய்ந்த லேசர்களைக் கொண்டு பூமியில் இருந்தோ அல்லது செயற்கைக் கோள்களில் இருந்தோ விண்கல்லை உடையச் செய்வது, பஸ்பமாக்கிவிடுவது இன்னொரு யோசனையாக உள்ளது.

ராக்கெட்டுகளைக் கொண்டு திசை திருப்புவது:

ராக்கெட்டுகளைக் கொண்டு திசை திருப்புவது:

இன்னொரு திட்டம் மாபெரும் ராக்கெட்டுகளின் உதவியோடு விண்கல்லில் மோதியோ அல்லது விண்கல்லின் பின்னால் இருந்து ராக்கெட்டுகளை உதவியோடு அதன் திசையை மாற்றச் செய்வது.

'ஜோடி' விண்கல்லுக்கு குறி:

'ஜோடி' விண்கல்லுக்கு குறி:

Asteroid Impact and Deflection mission (AIDA) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சிகளின் ஒருபடியாக விரைவில் Double Asteroid Redirection Test (DART) என்ற ஒரு விண்கலத்தை அனுப்பப் போகிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம். இது விண்ணில் சுற்றி வரும் ஒரு 'ஜோடி' விண்கற்களை ஆய்வு செய்யப் போகிறது. ஜோடியாக சுற்றி வரும் இந்த விண்கற்களில் சிறிய கல்லில் இந்த விண்கலம் மோதும். அதே நேரத்தில் இன்னொரு விண்கலம் பெரிய விண்கல்லில் தரையிறங்கி ஆராயும். சிறிய விண்கல்லில் நடக்கும் மோதலையடுத்து அருகே உள்ள விண்கல்லில் என்ன நடக்கிறது என்பதை ஆராயப் போகிறார்கள்.

உங்களிடம் ஐடியா கேட்கிறார்கள்...

உங்களிடம் ஐடியா கேட்கிறார்கள்...

இவ்வாறு சில திட்டங்கள் கைவசம் இருந்தாலும் இது தொடர்பாக பொது மக்களிடம் இருந்து ஆய்வுக்குரிய கருத்துக்களைக் கேட்கிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம். இந்தத் திட்டத்துக்கு நல்ல யோசனைகளை யார் வேண்டுமானாலும் தரலாமாம். ஏற்கனவே ஏராளமான யோசனைகள் வந்து குவிய ஆரம்பித்துவிட்டனவாம். இதில் நல்ல யோசனைகளை வரும் பிப்ரவரி 1ம் தேதி வெளியிடப் போகிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம்.

ரஜினிகிட்ட ஒரு இரும்பு கம்பியை குடுத்து, ராக்கெட்ல ஏத்திட்டுப் போயி விண்கல்லை அடிச்சு தூள் தூளாக்கலாம்.. 'பவர் ஸ்டாரின்' பெரிய போட்டோவை விண்கல் பக்கமா காட்டுனா.. அது தானே வேற பக்கமா போயிரும் போன்ற யோசனைகள் ஏற்கப்படா!

English summary
A space rock several hundred metres across is heading towards our planet and the last-ditch attempt to avert a disaster -- an untested mission to deflect it -- fails. This fictional scene of films and novels could well be a reality one day. But what can space agencies do to ensure it works?. The European Space Agency doesn’t want us to all die in a fiery doomsday when an asteroid hits the Earth, so the inter-governmental organization wants your help developing a plan of action to stop the deadly armageddon. “ESA is appealing for research ideas to help guide the development of a US–European asteroid deflection mission now under study,” the agency said in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X