For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானிடம் 120 அணு ஆயுதங்கள்; இந்தியாவிடம் 110 தான்!

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் (Stockholm International Peace Research Institute- 'SIPRI') இரு தினங்களுக்கு முன் தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் உள்ள பகீர் தகவல், பாகிஸ்தானிடம் இந்தியாவை விட அதிகமான அணு ஆயுதங்கள் உள்ளன என்பது தான்.

உச்ச கட்ட தயார் நிலையில் 4,000 அணு ஆயுதங்கள்...

உச்ச கட்ட தயார் நிலையில் 4,000 அணு ஆயுதங்கள்...

ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா என உலகளவில் அணு ஆயுதங்கள் வைத்துள்ள 9 நாடுகளிடம் மொத்தம் 4,000 அணு ஆயுதங்கள் உச்ச கட்ட தயார் நிலையில் உள்ளன என்கிறது இந்த அமைப்பு.

இவை தயார் நிலையில் உள்ள அணு ஆயுதங்கள். எந்த நேரத்திலும் விமானம், ஏவுகணை, நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்கள் மூலம் ஏவ முடியும் நிலையில் உள்ளவை.

மொத்தம் 16,300 அணு ஆயுதங்கள்:

மொத்தம் 16,300 அணு ஆயுதங்கள்:

இது தவிர இந்த நாடுகளிடம் மொத்தம் 16,300 அணு ஆயுதங்களை எந்த நேரத்திலும் தயாரிக்கக் கூடிய கதிர்வீச்சுப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. தயார் செய்ய வேண்டும் என்ற முடிவை அரசு எடுத்தால் சில வாரங்களில் இந்த ஆயுதங்கள் தயாராகிவிடும்.

ஒரே ஒரு சந்தோஷமான விஷயம்:

ஒரே ஒரு சந்தோஷமான விஷயம்:

இதில் ஒரே ஒரு சந்தோஷமான விஷயம், கடந்த ஆண்டு 17,270 அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் திறன் இந்த நாடுகளிடம் இருந்தது. அது இந்த ஆண்டு 16,300 ஆகக் குறைந்துள்ளது. அதாவது இதில் அமெரிக்கா, ரஷ்யா ஆகியவை தங்களது அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளை குறைத்துக் கொண்டுவிட்டதோடு, தங்களிடம் இருந்த அணு ஆயுதங்களை ஒழித்துக் கட்டவும் ஆரம்பித்துள்ளன.

நியூ ஸ்டார்ட் ஒப்பந்தமே காரணம்:

நியூ ஸ்டார்ட் ஒப்பந்தமே காரணம்:

இந்த 9 நாடுகளில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் தான் 93 சதவீத அணு ஆயுதங்கள் உள்ளன. இந்த இரு நாடுகளும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி தங்களது அணு ஆயுதங்களை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க ஆரம்பித்துள்ளன. இதற்குக் காரணம், Treaty on Measures for the Further Reduction and Limitation of Strategic Offensive Arms- 'New START') ஒப்பந்தம் தான்.

ஆனால்...

இதனால் தான் இந்த எண்ணிக்கை 16,300 ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் இந்த இரு நாடுகளுமே தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களின் திறனையும் அதை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளின் தூரத்தையும் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளன என்பது இங்கு கவனிக்கக் கூடிய விஷயமாகும்.

'New START' ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட பின் 10 ஆண்டுகளுக்கு முன் அணு ஆயுதங்களை ஒழிப்பை வேகமாக செய்து வந்தன அமெரிக்காவும், ரஷ்யாவும். ஆனால், இப்போது அந்த வேகம் குறைந்துபோய்விட்டது இன்னொரு கவலையான விஷயம்.

5 நாடுகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுத நாடுகள்:

5 நாடுகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுத நாடுகள்:

இதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 5 நாடுகள் தான் உலகளவில் சட்டரீதியாக அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள். இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், வட கொரியா அணு ஆயுதங்கள் வைத்திருக்க சர்வதேச ஒப்பந்தங்கள் இடம் தரவில்லை. ஆனால், இந்த 5 நாடுகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மற்ற 4 நாடுகளுமே அணு ஆயுத நாடுகளே.

சீனா, இந்தியா, பாகிஸ்தான்:

சீனா, இந்தியா, பாகிஸ்தான்:

அதிலும் சீனாவும், இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து தங்களது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வருவதோடு அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியம், புளுட்டோனி்யம் போன்ற கதிர்வீச்சுத் தனிமங்களை தங்களது அணு உலைகளில் தயாரித்தபடியே உள்ளன.

வட கொரியாவில் மக்களுக்கு சாப்பாட்டுக்கே வழியில்லாவிட்டாலும் அணு ஆயுதத் தயாரிப்பில் தீவிரமாக இருக்கிறது அந்த நாட்டு அரசு. காரணம், தென் கொரியாவில் நிலை கொண்டபடி வட கொரியாவை மிரட்டி வரும் அமெரிக்கா தான்.

பாகிஸ்தானிடம் 120, இந்தியாவிடம் 110:

பாகிஸ்தானிடம் 120, இந்தியாவிடம் 110:

இதில் 2013ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்தியாவுக்குக் கவலை தரும் ஒரு அம்சம் பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள். இப்போது பாகிஸ்தானிடம் 100 முதல் 120 அணு ஆயுதங்கள் உள்ளன என்கிறது SIPRI. அதே நேரத்தில் இந்தியாவிடம் 90 முதல் 110 அணு ஆயுதங்களே உள்ளனவாம்.

பாகிஸ்தானை நினைச்சா உலகுக்கே பயம்...

பாகிஸ்தானை நினைச்சா உலகுக்கே பயம்...

இதில் உலகையே கவலை கொள்ளச் செய்யும் விஷயம் பாகிஸ்தான் தான். காரணம், அந்த நாடு எந்த நேரத்திலும் தீவிரவாதிகளின் கைக்குள் போகும் என்பதே. அப்படி ஒன்று நடந்தால் அது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே பெரும் ஆபத்தில் போய் முடியும்.

ஈரானை நோக்கும் இஸ்ரேல்...

ஈரானை நோக்கும் இஸ்ரேல்...

சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை தொடர்ந்து தங்களது அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்துக் கொண்டே வர, ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை உற்று நோக்கி வரும் இஸ்ரேல், தனது அணு ஆயுதங்களுக்குத் தேவையான எரிபொருட்கள் தயாரிப்பை அதிகரித்தபடி உள்ளது.

English summary
Stockholm International Peace Research Institute (SIPRI) today launches its annual nuclear forces data, which assesses the current trends and developments in world nuclear arsenals. The data shows that while the overall number of nuclear weapons in the world continues to decline, none of the nuclear weapon-possessing states are prepared to give up their nuclear arsenals for the foreseeable future. At the start of 2014 nine states—the United States, Russia, the United Kingdom, France, China, India, Pakistan, Israel and North Korea—possessed approximately 4000 operational nuclear weapons. If all nuclear warheads are counted, these states together possessed a total of approximately 16 300 nuclear weapons (see table 1) compared to 17 270 in early 2013.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X