ஒருவர்: ''சினிமா நடிகைங்க மார்க்கெட் போனா என்ன செய்வாங்க?''
மற்றவர்: சம்பளத்தை குறைப்பாங்க! இல்லைன்னா சினிமாவில் இருந்து சீரியலுக்கு தாவிடுவாங்க!
ஒருவர்: அதெல்லாம் இல்லை காய்கறி வாங்குவாங்க!...
ஒரு அழகான பெண் மிகப்பெரிய ஷாப்பிங் மாலுக்கு சென்று ஏராளமான பொருட்களை வாங்கினாள். பணம் கொடுக்கும் இடத்திற்கு போன போது பர்ஸில் இருந்து டிவி ரிமோட் கண்ட்ரோலை எடுத்து மேஜை மீது வைத்தாள். இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட கேசியர், எப்பவுமோ, டிவி ரிமோட் உங்க கிட்டதான் இருக்குமா? என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண்... ...
கணவன் : நாளைக்கு அம்மா வர்றாங்க மனைவி : என்ன விளையாடுறீங்கள? அவங்க வந்து 4 மாசம் தானே ஆச்சு. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை வேற ஆட்டோக்காரனே இருக்க மாட்டான். நான் லேட்டாதான் எழுந்திருப்பேன். என்ன சமைக்கிறதுன்னு தெரியலை. அதுசரி எத்தனை நாள் அவங்க இங்க இருப்பாங்க? கணவன் : வரப்போறது எங்க அம்மா ...
மனைவி சமைத்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கணவர்.
மனைவி - ஏங்க, நான் உங்களுக்கு இப்படியே சமைச்சுப் போட்டுக் கிட்டிருந்தா எனக்கு என்னங்க கிடைக்கும்?.
கணவன்- என்னோட இன்சூரன்ஸ் பணம் சீக்கிரமா உன் கைக்கு வந்து சேரும்.............!!!
...
கணவனும், மனைவியும் நடந்து போய்க் கொண்டுள்ளனர். சாலையில் ஒரு குரங்கு கிராஸ் செய்து ஓடுகிறது.
மனைவி - என்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்கிறார் பாருங்க... யாருங்க இது?.
கணவன் (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்....!!!!!
...
நிர்மலா - ஏன் அந்த கிரிக்கெட் டீம்ல இருக்கிற வீரர்கள் எல்லாம் ஆம்புலன்ஸ்ல போறாங்க..??
கமலா - அந்த டீமோட பல வீரர்கள் காயமடைந்திருக்கிறார்களாம். அதனாலதாதன் 'டீம் பஸ்ல' போகாம, 'டீம் ஆம்புலன்ஸ்ல' போறாங்க...!
...
ராசு - எங்க வீட்டிலேயே நான் ஒருத்தான்தான் குடிகாரன். அதை நினைச்சு நான் ரொம்பப் பெருமைப்படுகிறேன்.
மொக்கராசு - ஏன் அப்படிச் சொல்றே...??
ராசு - ஏன்னா, எல்லோருமே எனக்கு கல்லீரலைத் தானம் தரும் அளவுக்கு தகுதியுடன் இருக்கிறார்களே அதை நினைத்துதான்!!!
...
ராஜு - தொண்டை 'கர'கரப்பா இருந்தா என்ன செய்யனும்..தெரியுமா?
தேஜு - தெரியலையே!
ராஜு - சர்ப் எக்ஸல் போடனும்.. இந்தக் கறை, அந்தக் கறை, எந்தக் கறையா இருந்தாலும் போய்ரும்!
...
தானாக புலம்பும் தண்டபாணியின் வருத்தம்...
அமெரிக்க டாலரோட மதிப்பு ஒரு டாலருக்கு 55க்கு மேல போயிருச்சு...
பால் விலையும் 40 ரூபா வர வந்துருச்சு...
பெட்ரோல் விலையும் 70 ரூபாவுக்கு மேல போயிருச்சு...
இந்த இக்கட்டான நிலையிலும் கடவுளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்... பரீட்சையில் பாஸ் மார்க்கை இன்னும் 35ன்னுதானே வச்சுருக்காங்க....!
...
அந்தப் பெண்ணுக்கு தனது தோழி மூலம் ஒரு காதலன் கிடைத்தான். கிடைத்த புதிய காதலனுடன் ஜாலியாக டேட்டிங் போனாள் அப்பெண். காலையில் வீடு திரும்பிய அவள் படு கடுப்பாக தனது தோழிக்குப் போன் போட்டாள். தோழி கேட்டாள்.. என்னடி நைட் செம ஜாலியா...? இளம்பெண் சொன்னாள்.. கொடுமையான இரவுடி அது... ...