மலையாள 'ஆதாமின்டே மகனு'க்கு ஆஸ்கர் போட்டியில் இடமில்லை!!

வியாழக்கிழமை, ஜனவரி 19, 2012, 16:26 [IST]
Adaminte Makan Abu
லாஸ் ஏஞ்சல்ஸ்: மலையாளப் படமான ஆதாமின்டே மகன் அபு ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

சர்வதேச சினிமாவில் மிக உயரிய விருதாகப் போற்றப்படும் ஆஸ்கர் விருதுகள் வரும் ஜனவரி 26-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கோடக் தியேட்டரில் இந்த விழா நடக்கிறது. உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான படங்கள் இந்தப் போட்டிக்கு வந்துள்ளன. இந்தியாவின் சார்பில் எந்திரன் உள்பட 9 படங்கள் பரிந்துரைக்கப்பட்டு, கடைசியில் ஆதாமின்டே மகன் அபு என்ற மலையாளப்படம் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டது.

சலீம் அகமது இயக்கிய இந்தப் படம் ஏற்கெனவே இந்தியாவில் தேசிய விருது உள்பட பல விருதுகளைப் பெற்றது. எனவே சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற போட்டியின் இறுதிச் சுற்றில் நுழைந்துவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் இப்போது இந்தப் படம் தேர்வாகவில்லை. பெல்ஜியம், கனடா, டென்மார்க், இத்தாலி, ஈரான், இஸ்ரேல், மொராக்கோ, போலந்து மற்றும் தைவானைச் சேர்ந்த படங்கள் இப்போது இறுதிச் சுற்றில் உள்ளன.

இந்தியாவிலிருந்து வந்த படங்களில் இதுவரை ஆஸ்கர் இறுதிச் சுற்றை எட்டிப் பிடித்தவரை மூன்றே பங்கள்தான். மதர் இந்தியா, சலாம் பாம்பே மற்றும் லகான் ஆகியவைதான் இறுதிச் சுற்றுவரை போயின.

English summary
Malayalam film 'Adaminte Makan Abu', India's official entry to the Oscars this year, is out of the race. The film failed to make it to the top nine in the Foreign Language Film category.
User Comments
Vincent Mohammed 23 Jan 2012 05:29 pm
இந்த படத்த ரீமக் பண்ணி, அதுல விஜய் நடிச்சா படம் டாப்பு
Ravi Ramul 21 Jan 2012 03:18 am
இது தமிழனுக்கு கிடைத்த முதல் வெற்றி.. ஒழிக்க மலையாள பட்டி.. ஒருதமிழ் படத்தை தேர்வு செய்திருந்தால் அது இன்று அஸ்க்கார் விருதுக்கு போயிருக்கும் மலையாளியின் பொராமைக்குணமே தொல்விக்குக்கரணம்.. மலையாளிகள் இருக்கும்வரை இந்திய உருப்படாது.. இது ஆரியனுக்கும் திராவிடனுக்குமான போர் " கருணாநிதி தெலுங்கு ஆரியன்" தமிழனை தமிழன் ஆளும்வரை இப்போர் ஓயாது... http://www.youtube.com/watch?v=nCa5suBMUj0&feature=share
nellai thamizn 19 Jan 2012 06:25 pm
எதனை நாள் தான் இந்த ஆதாம் ஏவாள் கதைய சொல்லிடிருபிங்க....
Thagappan Yappaa 19 Jan 2012 05:18 pm
ஆமா முஸ்லிம போட்டு எடுத்தாலே அவார்டு கொடுப்பாங்களா?அடுத்து அச்சநிண்டே மகன் எடு!
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST